"வர்றார் இருங்க".. வைகோவின் "கர்ஜனை" ஆரம்பம்.. அதிமுகவுக்கு அலர்ட்.. துரை வைகோ அதிரடி.. பாஜக கடுப்பு

துரை வைகோவின் சமீபத்திய பேட்டிகள் பாஜகவுக்கு எரிச்சலை கூட்டி வருகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுக்கு எதிரான கூட்டணிகள் ஒன்றிணைய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி உள்ளார் மதிமுகவின் துரைவைகோ.. ஏற்கனவே பாஜக குறித்து அதிமுகவை அலர்ட் செய்திருந்த நிலையில், துரைவைகோவின் பாஜக எதிர்ப்பு மீண்டும் வெளிப்பட்டுள்ளது..!!

மதிமுகவை பொறுத்தவரை, திமுகவுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது.. கடந்த முறை தேர்தலின்போது பாஜகவுக்கு எதிரான வைகோவின் கர்ஜனை, திமுக கூட்டணி வெற்றிக்கு அடித்தளமாக அமைந்ததை மறுக்க முடியாது..

கடந்த தேர்தலில் மதிமுகவுக்கு 1+1 என்ற ரீதியில், சீட்டுகளை ஒதுக்கி, தமிழழும் முழுவதும் வைகோவை பிரச்சாரத்துக்கும் அனுப்பியிருந்து அதன் வெற்றியையும் அறுவடை செய்திருந்தது..

 துரை வைகோ

துரை வைகோ

இந்த முறை எம்பி தேர்தலில் துரை வைகோ களமிறங்க போவதாக சொல்லப்படுகிறது.. சமீபகாலமாகவே துரை வையாபுரியின் அரசியல் வேகமெடுத்து வருகிறது.. நிறைய அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.. மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். உதயநிதி அமைச்சரானதற்கு நேரிலேயே சென்று வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார். அந்தவகையில், திமுகவுடன் மதிமுகவின் இணக்கமான கூட்டணி நட்பு தொடர்ந்து வருகிறது.. மற்றொருபுறம் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை எடுத்து, தமிழக கட்சிகளை அலர்ட் செய்து வருவதும் தீவிரமாகி வருகிறது.

வைகோ

வைகோ

துரை வைகோவின் ஒவ்வொரு பேட்டியிலும், பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தில் உறுதியாகவும், தீவிரமாகவும் இருந்து வருவது அரசியல் களத்தை உஷ்ணமாக்கி கொண்டிருக்கிறது. 4 நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "திமுகவுடன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும்.. அத்துடன், மதச்சார்பற்ற கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகளும் இணைய வேண்டும்.. வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக மதவாத சக்தி பாஜகவை முழு பலத்துடன் எதிர்க்க அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிச்சயம் மேற்கொள்வார்" என்று கூறியிருந்தார். இது கூட்டணி கட்சி தொண்டர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

 குறி சக்தி

குறி சக்தி

இந்நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய துரைவைகோ, "நான் என்னை தலைவராக எண்ணவில்லை.. கட்சி எனக்கு தலைமை கழகச் செயலாளர் என்ற பதவியை கொடுத்துள்ளது. ஒட்டு மொத்த இளைஞர்களின் செயல்பாடு, சக்தியை வைத்துதான் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியுமே தவிர குறிப்பிட்ட தலைவரை வைத்து இல்லை. விவசாயிகளை பாதிக்கும் பிரச்னைகளை நாம் கையில் எடுத்து போராடுவோம். 29 வருட கால நம் கட்சியின் வரலாற்றில், முதல்முறையாக ஆளும் கட்சிக் கூட்டணியில் உள்ளோம். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு மக்கள் பணியே சிறந்தது.

 மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

பாஜகவின் தவறான சித்தாத்தங்களுக்கு எதிராக உள்ள அனைத்து இயக்கங்களும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒன்றிணைந்தால் வெற்றி பெற முடியும். தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக வலுவான அணியே உள்ளது. அண்ணாமலை, மேக் இன் இந்தியா, இந்திய பொருட்களை ஊக்குவிப்பது என்று சொல்லிவிட்டு 5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கைக்கடிகாரத்தைக் கட்டியிருப்பது குறித்து அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.. அதேபோல, இந்தி மொழி திணிப்புக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருபவர் துரை வைகோ..

தாமரைகள்

தாமரைகள்

"இந்தியை இரண்டாவது மொழியாக ஆக்கிவிட்டு, ஆங்கிலத்தை பின்னடைவு செய்ய வேண்டும் என்று நினைத்துத்தான், அமித் ஷா ஒருசில நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். இந்தி படிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி படித்தால்தான் அரசு வேலை கிடைக்கும் என்று இந்தியைத் திணிப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என்றுசொல்லி கோவை விவகாரத்தில் பாஜக மலிவான அரசியல் செய்கிறது என்பதுவரை புட்டு புட்டு வைத்து விமர்சித்த நிலையில், பாஜக கடுப்பாகி உள்ளது..

 வைகோ ஸ்பீடு

வைகோ ஸ்பீடு

அதுமட்டுமல்ல, வரும் தேர்தலில் பாஜகவை எதிர்த்து நிற்கக்கூடிய கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு ஒன்றிணைந்து வெற்றி பெறாவிட்டால், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்று அதிமுகவையும் சேர்த்து அலர்ட் செய்திருந்தது மேலும் எரிச்சலை கூட்டி வரும் நிலையில், இன்றைய பேட்டியும் தாமரை கட்சியில் கொந்தளிப்பை உண்டு பண்ணி வருகிறதாம்.. அத்துடன், மதவாத சக்தி பாஜகவை முழு பலத்துடன் எதிர்க்க அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை வைகோ மேற்கொள்வார் என்று கூறியுள்ளதால், அதற்கான எதிர்பார்ப்பும் தொண்டர்களிடம் கூடி வருகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+