Women's day: மனைவியாய், மகளாய், தோழியாய்... பெண் விடுதலை பெற வாழ்த்துகிறேன்! வைரமுத்து
சென்னை: சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் வைரமுத்து, வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கவிதை நடையில் அவர் பெண் விடுதலை குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தாயாய் தமக்கையாய்
மனைவியாய் மகளாய்
தோழியாய் செவிலியாய்
ஆசானாய் அரசியாய்
சமூக இயங்கியலில்
பங்காற்றும் பெண்
இன்னும் எட்டவேண்டிய இடம்
தூரத்திலும் உயரத்திலும்
இருக்கிறது
மதம் மரபுகள் என்ற
இரண்டின் விலங்குகளைக்
கல்வி தொழில்நுட்பம்
என்ற சம்மட்டிகள்
உடைத்தெடுக்கும் காலத்தில்தான்
பெண்களின்
உலகவிடுதலை உருவாகும்;
நாளாகும்
குழந்தை மணம்
உடன்கட்டை போலவே
பெண்ணுக்குள் வினைப்படும்
சமையல்காரியும் ஒழிந்துபோவாள்
ஆண்களால் வடிவமைக்கப்பட்ட
பெண்களுக்கான நிகழ்ச்சிநிரல் முடிந்துவிடும்
பெண்ணுக்குள் புகுத்தப்பட்ட
அடிமை - தெய்வம்
இரண்டும் வெளியேறிவிடும்
காலப்போக்கில்
திருமணம் ஒழியும்;
குழந்தை பெறுதல்
சுயவிருப்பமாகும்;
பெண் தற்சார்பு பெறுவாள்
தனி உரிமையாகிய
வீடு என்பது ஒழிந்து
இருப்பிடம் என்னும்
கூடு உருவாகும்
வாழ்வு மரணம் இரண்டிலும்
தனியார் தலையீடு இருக்காது
பெண்ணின்
உடல் மனம் தொழில்
என்ற மூன்றும்
எதையும் யாரையும்
சாராதியங்கும்
விரும்பியோ விரும்பாமலோ
இவை நிகழும்நாளில்
பெண்விடுதலை பூரணமாகும்
எங்கள் வாழ்வின்
காரணமான பெண்ணினமே
அந்தப் பூரணம்பெற
வாழ்த்துகிறோம்
#WomensDay2026 #WomensDay
இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தாயாய் தமக்கையாய்
— வைரமுத்து (@Vairamuthu) March 8, 2026
மனைவியாய் மகளாய்
தோழியாய் செவிலியாய்
ஆசானாய் அரசியாய்
சமூக இயங்கியலில்
பங்காற்றும் பெண்
இன்னும் எட்டவேண்டிய இடம்
தூரத்திலும் உயரத்திலும்
இருக்கிறது
மதம் மரபுகள் என்ற
இரண்டின் விலங்குகளைக்
கல்வி தொழில்நுட்பம்
என்ற சம்மட்டிகள்
உடைத்தெடுக்கும் காலத்தில்தான்…
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications