ஞானபீட விருது தமிழ் கவிதைக்கு இதுவரை கிடைத்ததில்லை! இந்த குறை என்னால் கழிந்தது! வைரமுத்து மகிழ்ச்சி
சென்னை: ஞானபீட விருது இதுவரை தமிழக எழுத்தாளர்களுக்கு கிடைக்கப்பெற்றது. ஆனால் தமிழ் கவிதைக்கு இதுவரை கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது என கவிப்பேரரசு வைரமுத்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஞானபீட விருது இலக்கியத்திற்கு பெரிதினும் பெரிது, தமிழுக்கு அரிதினும் அரிது. இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என்று அறிவுலகத்தால் கருதப்படும் ஞானபீட விருது பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதுவரை தமிழ் பெற்ற இரு விருதுகளும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டவை. இப்போதுதான் ஞானபீடம் தமிழ்க் கவிதைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்க் கவிதைக்கு ஞானபீடம் இதுவரை இல்லை என்ற குறை என்னால் கழிந்தது.
என்னை வளர்த்த தமிழ்ச் சமூகத்தை நன்றியோடு நினைத்து பார்க்கிறேன். மண்ணுக்கும் மக்களுக்கும் இந்த விருதை காணிக்கையாக்குகிறேன். இந்த விருது என் வயதை குறைத்துவிட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வென்றுள்ளார். அதுபோல, 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலுக்கான 2003-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். இவருக்கு 2014-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு இப்போது ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1965-ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த சங்கர குருப் என்பவருக்கு முதல் ஞான பீட விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 60-வது ஞானபீட விருது வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1975-ஆம் ஆண்டு 'சித்திரப்பாவை' நாவலுக்காக அகிலன் மற்றும் 2002-ல் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் ஞானபீட விருது பெற்றுள்ளனர்.
வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: "தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது. காலையில்தான் வைரமுத்துவை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது.
காணிக்கை#ஞானபீட_விருது pic.twitter.com/7qPw3G7GRa
— வைரமுத்து (@Vairamuthu) March 15, 2026
தமிழில் இதுவரையில் அகிலனும், ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் வைரமுத்துவின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் வைரமுத்துவை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று வைரமுத்துவை வாழ்த்துகிறேன், அவரை தமிழ்நாடே வாழ்த்துகிறது." என தெரிவித்துள்ளார்.
அது போல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் வைரமுத்துவை வாழ்த்தியுள்ளனர். அவரது வீட்டருகே ரசிகர்களும் தமிழ் ஆர்வலர்களும் நேற்றைய தினம் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications