சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக முதல்வர் கருத்து

    சென்னை: அதிமுக கொடி கம்பம் விழுந்து காலை இழந்துள்ள பெண்ணுக்கு உதவுமாறு முதல்வருக்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கோவையில் உள்ள சாலை ஒன்றில் அதிமுகவின் கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ராஜேஸ்வரி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவரது கால் முற்றிலுமாக சிதைந்தது.

    இலங்கை தேர்தல்- இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!இலங்கை தேர்தல்- இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

    அக்கவுண்ட்டன்ட் வேலை

    அக்கவுண்ட்டன்ட் வேலை

    பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரிக்கு சுயநினைவு திரும்பவில்லை. பெற்றோருக்கு இவர் ஒரே மகள். சில வாரங்களுக்கு முன்புதான் ஹோட்டலில் அக்கவுண்ட்டன்டாக வேலைக்கு சேர்ந்தார்.

    கோரிக்கை

    கோரிக்கை

    அறுவை சிகிச்சைக்கு உண்டான பணம் கிடைக்காமல் பெற்றோர் மிகவும் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கோரிக்கை அளித்துள்ளார்.

    வானதி கோரிக்கை

    இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் வானதி கூறுகையில் துயரம் இது... கொடிக்கம்பம் விபத்திற்கான காரணமாய் இருந்துள்ளதை உடனிருந்த நபர் உறுதியாக கூறியுள்ளார் என முதல்வர் அந்த பெண்ணின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என வானதி கோரியுள்ளார்.

    தமிழகத்தில்

    தமிழகத்தில்

    இதைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ரஜினிகாந்த் அரசியல் தலைவர் இல்லை என முதல்வர் கூறியது சரியே. ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது என்றார்.

    English summary
    Vanathi Srinivasan asks CM to help the girl Rajeshwari who lost her legs because of flag pole fell on her.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X