நீட் தேர்வை முன்மொழிந்தது யாரு?.. வானதி கேட்ட கேள்விக்கு கட்டாயமாக்கியது யாருனு கேட்ட நெட்டிசன்கள்
சென்னை: நீட் தேர்வை முதலில் இந்தியா முழுவதும் நடத்தியது யாருனு பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கேட்ட கேள்விக்கு கட்டாய தேர்வு நடத்தியது யாரு என நெட்டிசன்கள் பதில் கேள்வி கேட்டுள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதா இன்றைய தினம் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பாஜகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு தந்தன.
இதையடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்த மசோதா தாக்கலான போது பாஜகவின் 4 எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

எம்எல்ஏ வானதி
இதையடுத்து இந்த மசோதா குறித்து கோவை தெற்கு தொகுதியின் எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் நீட் தேர்வு இந்தியா முழுமைக்கும் உள்ள அகில இந்திய அளவிலான இடம் மட்டுமல்லாமல் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கும் இந்த தேர்வு முறை பொருந்தும்.

தமிழக மாணவர்களுக்கு
இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு மத்திய மருத்துவக் கல்லூரிகளில் தனியாக தேர்வு எழுதாமல் இடம்பெற முடியும் என தனது ட்விட்டரில் வானதி தெரிவித்துள்ளார். இது குறித்து வானதி மற்றொரு ட்வீட்டில், #NEET தேர்வை முன்மொழிந்தது யாரு? #NEET தேர்வை முதன்முதலில் இந்தியா முழுவதும் நடத்தியது யாரு?

மத்தியில் ஆட்சி
21.12.2010 அன்று மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக- காங்கிரஸ் கூட்டணி அரசுதான், நீட் நுழைவுத் தேர்வை முன்மொழிந்தது. 2013ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு, திடீரென்று இந்தியா முழுவதுக்கும் நீட் நுழைவுத் தேர்வை நடத்தினார்கள். தற்போது ஏதோ பின்னணி காரணங்களுக்காக திமுக நீட் தேர்வை எதிர்க்கிறது என்றார்.

பாலியல் சுரண்டல்கள்
கட்டாய நீட் தேர்வை கொண்டு வந்தது யாரு? நீட் தேர்வை திணித்தது எந்த ஆட்சி? சரி 15 வீடியோக்களுக்கு எதிராக எதாவது நடவடிக்கைகள் எடுத்தீங்களா? உங்க கட்சியின் பாலியல் சுரண்டல்கள் குறித்து மூச்சு விடாதது ஏன்.? கேடி ராகவனின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக செய்தி கூட வரலையே ஏன்?
Recommended Video

நீட் தேர்வு
காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வு சட்ட மசோதாவை...
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது ஆளும் பாஜக அரசு.
அதை பின்பற்றி தமிழ்நாட்டில் நீட் அனுமதி அளித்தது முந்தைய அடிமை அதிமுக எடப்பாடி அரசு.
இது தெரியாம எப்படி MLA ஆனீங்க அக்கா...

இணையலாமா வேண்டாமா
பழைய நீட்டில் மாநிலங்களுக்கு இணையலாமா வேண்டாமா என்ற option இருந்தது. கட்டாயமாக்கியது யாரு ?

கட்டாயமாக்கியது யாரு
பழைய நீட்டில் மாநிலங்களுக்கு இணையலாமா வேண்டாமா என்ற option இருந்தது. கட்டாயமாக்கியது யாரு ?

தள்ளுபடி
நீட் வேண்டாம் என்று தள்ளுபடி செய்யப்பட்ட ஒருவழக்கை, கட்டாய நீட் என்று சட்டம் இயற்றி மீண்டும் உச்சநீதிமன்றதுக்கு கொண்டுபோனது யார்?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்!












Click it and Unblock the Notifications