ஸ்டாலின் சுயாட்சி குறித்து பேச்சு.. வானதி சீனிவாசன் கொடுத்த கடும் பதிலடி
சென்னை: அரசியல் சட்ட மாமேதை அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் கேள்வி குறியாக்கி உள்ளார் என கோவை தெற்கு எம்எல்ஏவும் பாஜக மூத்த தலைவருமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தின் (Interim Budget) மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநில சுயாட்சி குறித்து மிக முக்கியமான உரையை நிகழ்த்தினார். அப்போது, மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் முதல் பகுதியை முதலமைச்சர் இன்று அவையில் தாக்கல் செய்தார்.

மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்:
மாநில அரசுகளை முழு அதிகாரம் கொண்ட அமைப்புகளாக மாற்றும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். "அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வைத்துள்ள ஒன்றிய அரசு, மாநில அரசுகளை மதிப்பதில்லை. நாம் இன்னும் எத்தனை காலம்தான் அவர்கள் கொடுக்கும் இடத்தில் இருப்பதும், நாம் வாங்கும் இடத்தில் இருப்பது?" என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
ஒவ்வொரு நிதி ஆதாரத்திற்காகவும் ஒன்றிய அரசிடம் போராட வேண்டிய இக்கட்டான நிலையில் மாநிலங்கள் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம் தெரிவித்தார்.
தனது உரையில் சில வரலாற்றுப் பின்னணிகளையும் கொள்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்:
"பூனைக்கு மணி கட்டியிருக்கிறோம்": மாநில சுயாட்சி குறித்து இந்த முன்னெடுப்பை எடுத்திருப்பது பற்றி குறிப்பிடும்போது, "பூனைக்கு மணி கட்டியிருக்கிறோம், நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்?" என்று பேசினார்.
"மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி": பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதியின் வழியில், இந்த முழக்கத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவிற்கு கூட்டாட்சி தத்துவமே அடிப்படை என்றும், இது ஒரு தனிப்பட்ட கட்சியின் கோரிக்கை அல்ல, மாறாக நாட்டின் வளர்ச்சிக்கான தேவை என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலடியாக சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், மாநில சுயாட்சி குறித்தான அறிக்கையை சட்டப்பேரவையில் முதலமைச்சர் வழங்கியுள்ளார். நாட்டில் உள்ள ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் திமுக'வால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்கு இன்று முதல்வர் வழங்கியுள்ள அறிக்கையே சான்று. திமுக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவே அறிக்கையை தந்துள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவிற்கே திமுக எதிராக இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.
2004 முதல் 2014 வரையில் மத்தியில் காங்கிரஸ் இருந்த பொழுது திமுகவிற்கு இது தேவை படாமல் போய்விட்டதா? ஆட்சியின் அவலத்தை மறைப்பதற்கும் ஆட்சி அதிகாரம் நிறைவுபெறும் வேலையில் மாநில சுயாட்சி என்ற பிரச்சனையை தேவையே இல்லாமல் கொண்டு வந்துள்ளது திமுக. வழக்கம் போல வீரவசனத்தை முதல்வர் பேசி, தேர்தல் நேரத்தில் இந்த பிரச்சனைக்கு மீண்டும் உயிரூட்டப் பார்க்கிறார் ஸ்டாலின்.
அரசியல் சட்ட மாமேதை அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி குறியாக்கி உள்ளார்" இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications