வண்டலூர் பிஸி.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு ரெடி.. கிளாம்பாக்கத்திலும் அதிரடி.. தமிழக அரசு மாஸ் சர்ப்ரைஸ்
சென்னை: வார இறுதி நாட்கள் துவங்கியிருக்கும் நிலையில், தமிழக போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை பொதுமக்களுக்காக வெளியிட்டிருக்கிறது.
பணிநிமித்தம், கல்வி, உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, சொந்த ஊரிலிருந்து பொதுமக்கள் நகரங்களுக்கு கிளம்பி செல்வது வழக்கமான ஒன்றுதான்.. அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற தொழிற்நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் தங்கியிருக்கிறார்கள்.

பயணிகள்: இவர்கள் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் இயல்பான விஷயமே. அந்தவகையில், தற்போது வாரவிடுமுறை ஆரம்பமாகி உள்ளது.. அதுவும் இல்லாமல், முகூர்த்த நாட்களும் வரஉள்ளன.. எனவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இன்றையதினமும், அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து 31-ம் தேதி 500 பேருந்துகளும்,1-ம் தேதி 570 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.. அதேபோல, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அறிவிப்பு: இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது: "31/05/2024 (வெள்ளிக் கிழமை) 01/06/2024 (சனிக்கிழமை) மற்றும் 02/06/2024 (ஞாயிற்றுக் கிழமை) முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 31/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 600 பேருந்துகளும் 01/06/2024 (சனிக்கிழமை) அன்று 570 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 31/05/2024 மற்றும் 01/06/2024 வெள்ளி மற்றும் சனிக் கிழமை) அன்று 130 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 31/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 500 பேருந்துகளும் 01/06/2024 (சனிக்கிழமை) அன்று 570 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 31/05/2024 வெள்ளிக் கிழமை அன்று 66 பேருந்துகளும் 01/06/2024 சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பங்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்: மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக் கிழமை அன்று 9,356 பயணிகளும் சனிக்கிழமை அன்று 5.844 பயணிகளும் ஞாயிற்றுக் கிழமை 10.897 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வசதிகள்: இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications