வண்டலூரில் விழுந்த "டபுள் ஷாக்".. உயிரியல் பூங்கா சேதி தெரியுமா.. கண்ணை கட்டுதே.. ஒரேடியாக எகிறுதே
சென்னை: இந்தியாவிலேயே, உயிரியல் பூங்காக்களில் மிகச்சிறந்த பூங்கா என்ற விருதை பெற்றிருக்கும், வண்டலூர் உயிரியல் பூங்கா குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
வண்டலூர் பூங்கா தான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும்.. கடந்த 1855ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. அப்போது இந்த விலங்கியல் பூங்காவிற்கு "மெட்ராஸ் பூங்கா" என்று பெயர்.. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்திருந்தார்கள்.

பூங்கா: அதற்கு பிறகுதான், விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது.. அப்போது முதல், அதன் பெயரும், 'வண்டலூர் உயிரியல் பூங்கா என்று மாற்றம் செய்யப்பட்டது.
இந்த பூங்காவில் அரிய வகை மிருகங்கள் உள்ளன.. 2,400 மிருகங்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல அரியவகை பறவைகளும் உள்ளன.. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் இதை பார்ப்பதற்காக குவிவார்கள்.. முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த பூங்காவை ஆர்வத்துடன் காட்டி மகிழ்வார்கள். எப்படியும் ஒருநாளைக்கு, 2500 முதல் 3000 பேர் வரை இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்... அதுவும் லீவு நாட்கள் என்றால், 10 ஆயிரம் பேர்கூட வந்து செல்கிறார்கள்.
டிக்கெட் கட்டணம்: இந்த பூங்காவை சுற்றிபார்க்க டிக்கெட் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.. இந்த கட்டணத்தை ரூ.200 ஆக உயர்த்த அரசு இருப்பதாக தகவல்கள் வெளியானது.. இந்த திடீர் கட்டண உயர்வுக்கு காரணம், விலங்குகளின் சாப்பாட்டுக்கே ரூ.6 கோடிக்கு மேல் ஆகிறதாம்.. அத்துடன் ஊழியர்களின் சம்பளத்துக்கு ரூ.7 கோடி வரை செலவாகிறது என்கிறார்கள்... மேலும், விலங்குகள் பரிமாற்றத்தின் கீழ் சிங்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன..
இதைத்தவிர, காட்டு கழுதைகள், ஒட்டகசிவிங்கி, வரிக்குதிரைகள் போன்றவை அதிகமாக இடம் பெற உள்ளதாகவும் தெரிகிறது. அதனால்தான், இந்த கட்டண உயர்வு என்கிறார்கள்.
கட்டணம் அதிகம்: அதுமட்டுமல்ல, இந்த கட்டண உயர்வின் மூலம் பூங்காவை இன்னும் சிறப்பாக பராமரிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள். கடந்த 4 வருடங்களாகவே கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், இப்போது, கட்டண உயர்வு அதிகரிக்கப்பட உள்ளது.. எனினும், ஒரேயடியாக டபுள் மடங்கு கட்டணம் எகிறியுள்ளது சற்று அதிகம் என்று பொதுமக்கள் முணுமுணுக்க துவங்கிவிட்டனர்.
பேட்டரி வாகனங்கள்: எனினும் அரசு இந்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.. இப்போதைக்கு, நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.90, சிறியவர்களுக்கு ரூ.50, பேட்டரி வாகனத்தில் சென்று பூங்காவை சுற்றி பார்க்க பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50, லயன் சபாரி மற்றும் மான் சபாரியை சிறப்பு வாகனத்தில் சென்று பார்ப்பதற்கு பெரியவர்களுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.60 வசூல் செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இனிமேல், பூங்காவின் நுழைவு கட்டணம் ரூ.200-ஆக உயர்த்துவதற்கும் இதேபோல பூங்காவை சுற்றி பார்க்கும் பேட்டரி வாகன கட்டணம் ரூ.150, லயன் சபாரி மற்றும் மான் சபாரி சென்று பார்க்கும் வாகன கட்டணங்கள் ரூ.200, கேமரா மற்றும் வீடியோ கொண்டு செல்வதற்கான கட்டணங்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம், அவர்கள் எடுத்து வரும் கேமரா, வீடியோ கட்டணங்கள் என அனைத்துமே உயரபோகின்றனவாம். இதுகுறித்து ஓரிரு நாட்களில் அரசாணை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கோரிக்கை: ஆனால், இந்த கட்ட உயர்வால், பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையக்கூடும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, விலங்குகளை பார்ப்பதை தவிர போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பூங்காவில் இல்லை.. போதிய பேட்டரி வாகனங்களும் இல்லை. அதனால், இந்த கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் இப்போதே கிளம்பிவிட்டன.












Click it and Unblock the Notifications