ஹைடெக் வசதி! வேற லெவலில் ரெடியாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர்.. எப்போது சேவை தொடங்கும்.. வெளியான அப்டேட்
சென்னை: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் வரும் நவம்பர் மாதம் முதல் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கவாச் தொழில் நுட்பம், சிசிடிவி கேமரா வசதிகள், டச் செய்தால் ஓபனாகும் கதவுகள் என பல வசதிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் தற்போது பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை முழுக்க ஏசி வசதி கொண்டது ஆகும். சொகுசான இருக்கைகள், தானியங்கி கதவுகள், பயோ டாய்லட்கள், வைஃபை வசதி என விமானத்திற்கு நிகரான சொகுசுகளுடன் வந்தே பாரத் ரயில்கள் உள்ளன.

பிற ரயில்களுடன் ஒப்பிடும் போது வந்தே பாரத் ரயில்கள் செல்லும் வேகமும் அதிகம். இதனால், பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது நாடு முழுவதும் 55க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் சென்னை - நெல்லை, சென்னை - கோவை, சென்னை - பெங்களூர், கோவை- பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்து இருக்கை வசதி கொண்டவையாக உள்ளது. இதனால், நீண்ட தொலைவிற்கு ரயில்களை இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால், இரவு நேர பயணங்கள் மற்றும் பல மாநிலங்களுக்கு இடையேயான சேவையாக வந்தே பாரத் ரயிலை இயக்கும் விதமாக ஸ்லீப்பர் ரயிலை அறிமுகம் செய்யவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.
தொலைதூரங்களுக்கு செல்லும் பயணிகள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பெரிதும் எதிபார்த்து உள்ளனர். இந்த நிலையில் தான், வந்தே பாரத் ரயில் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் நவம்பர் மாதம் இந்த ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே வட்டார தகவல்கள் கூறுகின்றன.
ஸ்லீப்பர் ரயில்களை பொறுத்தவரை இந்த ரயில் கவாச் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிறது. அதுபோக ஸ்விட்ச் மூலம் இயங்கும் கதவுகள், பெட்டிக்குள் சிசிடிவி வசதி, சுடு தண்ணீர் வசதி என விமானத்திற்கு நிகரான சொகுசுகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்..
டெல்லி - மும்பை, டெல்லி - ஹவ்ரா வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்படாலம் என சொல்லப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் சோதனை ஒட்டம் நடத்தப்பட்டு, நவம்பரில் அறிமுகம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications