வருது வருது.. வந்தே பாரத் ரயில் இன்னொன்னு வருது.. ஹேப்பியில் குதிக்கும் புதுச்சேரி.. ஆவலுடன் நெல்லை
சென்னை: நாடு முழுதும் பல்வேறு வழித்தடங்களில், 30 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும்நிலையில், அடுத்த ஓரிரு மாதங்களில் மேலும் 3 வந்தே பாரத் ரயில்களின் சேவை துவங்கப்படும் என்று தகவல்கள் வட்டமடிக்கும் நிலையில், இன்னொரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் உள்ளதால், மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில், என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்..

அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.
குளுகுளு ரயில்: முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளதால், பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்று வருகின்றன.
இந்த வந்தே பாரத் திட்டம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்கிறார்கள்.. அதனால்தான், ஒவ்வொரு வந்தே பாரத் ரயில் சேவையையும் நேரடியாகவே சென்று பிரதமர் துவக்கி வைத்து வருகிறார். நம்முடைய தமிழ்நாட்டில்கூட, 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. சென்னை - மைசூரு & சென்னை - கோவை ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்குகின்றன. இதில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தென்மாவட்ட மக்கள்: இப்போது, சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தப்போவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து, அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் தென் மாவட்ட மக்கள் இந்த ரயிலை அதிகம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல, விஜயவாடா - சென்னைக்கு ஒரு வந்தே பாரத் ரயிலும், புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு சென்னை வழியாக ஒரு வந்தே பாரத் ரயிலும் இயக்க திட்டமிட்டு இருப்பதாக ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
சாதாரண் வந்தே பாரத்: இதுபோக, ஆரஞ்சு நிற வந்தேபாரத் நெல்லை-சென்னை ரோட்டில் தான் இயங்கும் என்கிறார்கள். இதுபோக, குறைந்த கட்டணத்தில் 'சாதாரண் வந்தே பாரத்' வரப்போவதாக சொல்கிறார்கள். இந்நிலையில், அடுத்த குட்நியூஸ் வந்துள்ளது.. பெங்களூரு டூ புதுச்சேரிக்கு வந்தே பாரத் வரப்போகிறதாம்.
தென்மேற்கு ரயில்வே பெங்களூரில் இருந்து மதுரை மற்றும் புதுச்சேரிக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கும் பணியை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.. குறிப்பாக, வழித்தடங்கள், பயண நேரம் உள்ளிட்ட விபரங்கள் சேகரிப்பு பணியும், வந்தே பாரத் ரயில் பராமரிப்பு, ரயில் பராமரிப்பு யார்டுகள் மேம்படுத்தும் பணிகளும் துரிதமாக நடந்து வருவதாக சொல்கிறார்கள்.. இந்த ரயில்களின் சேவையும் அடுத்த வருட இறுதிக்குள் துவங்கலாம் என்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications