"குறைஞ்சிடுச்சாமே".. வந்தே பாரத் ரயில்.. சென்னை டூ கோவை சேவை முன்பதிவு.. என்னாச்சு? அதுதான் காரணமா?
சென்னை: கடந்த ஏப்ரல் மாதம், பிரதமர் மோடி, கோவை - சென்னை இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவையை துவக்கி வைத்தார்.. இப்போது இந்த சேவை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.
கனவு திட்டம்: தமிழகத்திலும் சென்னை- மைசூரு இடையேயும் சென்னை - கோவை வழித்தடத்திலும் இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் இருந்தாலும் வந்தே பாரத் அதிவேகத்தில் இயக்கப்படும் என்ற அறிவிப்புதான் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ரயில் என்ஜின்: ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.
முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது பிரதமர் மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான், அவரே ஒவ்வொரு ரயிலையும் நேரில் சென்று தொடங்கி வைத்தும் வருகிறார். அந்தவகையில்தான், கோவை - சென்னை இடையே 'வந்தே பாரத்' ரயில் (எண்:20644) இயக்கம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி துவங்கப்பட்டது.
ஸ்பெஷாலிட்டி: இதில் என்ன ஸ்பெஷல் என்றால், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பிற எக்ஸ்பிரஸ் ரயில்களை காட்டிலும் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான பயண நேரத்தை மிச்சப்படுத்துகிறது. 8-பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் முக்கியமான வளர்ச்சி திட்டமாகும், பல இடத்தில் வந்தே பாரத் ரயில்களில் போதுமான பயணிகள் இல்லாமல் இயங்க வேண்டிய நிலையை மாற்றும் வகையில் 16 பெட்டிகளுக்கு பதிலாக 8 பெட்டிகள் மட்டுமே கொண்டு இயக்கப்படும் புதிய திட்டம் சென்னை - கோவை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
ரிசர்வேஷன்: ரயில் இயக்கம் துவங்கிய அடுத்த 10 நாளிலேயே அதாவது, ஏப்ரல் 19ம் தேதி வரை, கோவையில் இருந்து, 6,800 பேர் பயணித்தார்கள்.. அடுத்தடுத்த நாட்களுக்கும் இந்த முன்பதிவானது அதிகரித்தது.. தொடர்ந்து சுறுசுறுப்பாகி கொண்டே போனது.. இதனால், மொத்தமுள்ள, 535 இருக்கைகளும் நிரம்பி வழிந்தன.. அதுவும், கோடை விடுமுறை என்பதால், இந்த வந்தே பாரத் ரயிலை பயணிகள் முழுமையாக பயன்படுத்தி கண்டார்கள்..
இந்நிலையில், கோடை விடுமுறை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.. அக்னி வெயிலும் முடிந்துவிட்டது.. தமிழகத்தில் பள்ளியும் துவங்க போகிறது.. இதனால் வந்தே பாரத் ரயில் முன்பதிவு லேசாக குறைந்துள்ளதாம்..
முன்பதிவு குறைவு: மொத்தமுள்ள, 533 இருக்கைகளில், கோவையில் இருந்து துவங்கும் பயணத்துக்கு மட்டும், 450க்கும் அதிகமான இருக்கைகள் இப்போதைக்கு நிரம்பி வருகிறது.. ஆனால், 50 முதல், 75 இருக்கைகள் முன்பதிவு தாமதமாகிறதாம்.. கோவையில் இருந்து சென்னைக்கு முன்பதிவு குறைந்தாலும், சேலம் - சென்னை இடையே டிக்கெட் முன்பதிவானது, அதிகரித்தே வருகிறது என்கிறார்கள் ரயில்வே முன்பதிவு மைய அதிகாரிகள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications