Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வந்தே பாரத் ரயில்.. அடுத்து விழுந்த பலத்த அடி.. பறந்து வந்த வார்னிங்.. "இந்த நம்பரை" நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வந்தே பாரத் ரயிலில் மீண்டும் ஒரு கல்வீச்சு சம்பவம் நடந்துள்ள நிலையில், வன்முறையாளர்களை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.. அத்துடன், எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றும் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

vande bharat train incident and stone pelting incident on vande bharat train in uttar pradesh

எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.

மோடியின் கனவு திட்டம்: தமிழகத்திலும் சென்னை- மைசூரு இடையேயும் சென்னை - கோவை வழித்தடத்திலும் இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் இருந்தாலும் வந்தே பாரத் அதிவேகத்தில் இயக்கப்படும் என்ற அறிவிப்புதான் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ரயில் என்ஜின்: ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.

இது பிரதமர் மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான், அவரே ஒவ்வொரு ரயிலையும் நேரில் சென்று தொடங்கி வைத்தும் வருகிறார். அடுத்த சில தினங்களில் மொத்தமாக 5 வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி துவக்கி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன.

பரோட்டாவில் புழு: ஆனால் வந்தே பாரத் ரெயில் போக்குவரத்து துவங்கியதில் இருந்தே ஏகப்பட்ட புகார்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.. ரயில் பெட்டியில் மழைநீர் ஒழுகியது, மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல், பரோட்டாவில் புழுக்கள் போன்ற புகார்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. இதில் வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பரோட்டாவில் புழு நெளிந்தது அதுவும், வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை கிளப்பியது.. இது தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

மற்றொருபக்கம், ரயிலின்மீது கல்வீச்ச சம்பவமும் அடிக்கடி நடந்து வருகின்றன.. கல்வீசி தாக்குவதால், கண்ணாடிகளும் நொறுங்கியிருக்கின்றன..

தொடர் கல்வீச்சு: உத்தரபிரதேசம், பிஹார், சட்டீஸ்கர், தெலங்கானா, மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களின் பல்வேறு இடங்களில், இந்த கல்வீச்சுகள் ஏற்கனவே அரங்கேறி இருக்கின்றன. வந்தே பாரத் ரயில் மீது கல் வீசுவோருக்கு எதிராக ரயில்வே பாதுகாப்பு படையினரும் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனினும் கல்வீச்சினை தொடரும் சமூக விரோதிகள் மத்தியில் அச்சமின்மை காணப்படுவதால், தெற்கு மத்திய ரயில்வே புதிய எச்சரிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

அதில், "ரயில் மீது கல் வீசித் தாக்குதல் நடத்துவது என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். இதற்கான தடைச் சட்டத்தின் கீழ், கைதாகும் நபர்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு ஆளாவார்கள்" என்று ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதுமட்டுமல்ல, ரயில் மீது கற்களை வீசுவது என்பது ரயில்வே சட்டத்தில் 153 மற்றும் 154 பிரிவுகளின்கீழ் குற்றமாகும் என்றும், இது போன்ற கல்வீச்சு சம்பவங்கள் நடந்தால், கட்டணமில்லா உதவி எண் 139-க்கு தகவல் தெரிவிக்கலாம்" என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கைது நடவடிக்கை: இதனிடையே, வந்தே பாரத் ரயில் மீது கல் வீசியதாக, ரயில்வே பாதுகாப்பு படையினரால் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும்கூட, உத்தரபிரதேச மாநிலத்தில் மறுபடியும் கல்வீச்சு நடந்துள்ளது.. முசாபர்நகர் ரயில் நிலையம் அருகே டெல்லி-டேராடூன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் E1 பெட்டியில், கல் வீசப்பட்டிருக்கிறது.. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர், இந்த நாசவேலைக்கு காரணமானவர்களை கைது செய்தது.

காயங்கள் எதுவும் இந்த கல்வீச்சில் பயணிகளுக்கு ஏற்படவில்லை என்றாலும், இந்த பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.. வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது, இது 7வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+