பறக்கிறது வந்தே பாரத் ரயில்.. உக்ரைன் இல்லாமலே சுழலுது சக்கரம்.. இந்திய ரயில்வேக்கு பெரிய மகிழ்ச்சி
சென்னை: ரயில்களின் சேவை இன்றைய காலகட்டத்தில் அவசியமாகிவிட்டது.. ரயில் பயணிகளின் எண்ணிக்கைகளும் பெருகி கொண்டே வருகின்றன.. இதனால் ரயில்களை அதிகமான எண்ணிக்கையில் இயக்க வேண்டிய நிலைமை வந்துள்ளது.. அந்தவகையில், ரயில்வேயின் அதிவேக ரயில் சேவைகளில் ஒன்றான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.. இதுகுறித்து முக்கியமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
பேருந்துகளைவிட அதிக வரவேற்புகளை ரயில்கள் பெற்று வருகின்றன.. இதற்கு காரணம், நீண்ட தூரம் பிரயாணங்களுக்கு களைப்பின்றி செல்ல ரயில்களே வசதியாக உள்ளதாக பயணிகள் நம்புகிறார்கள்.நம்முடைய இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் அமிர்த பாரத் போன்ற ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகளின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றன.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
களைப்பின்றி வேகமான பயணம் காரணமாக பொதுமக்களும் இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு முக்கியத்துவம் தந்து வருகிறார்கள்.. இதன்காரணமாக கூடுதல் பெட்டிகள், தொழில்நுட்ப அம்சங்கள் போன்றவை வந்தே பாரத் ரயில்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
சாதாரண ரயில்களை விட அதிகம் வேகம், சுகமான வசதி, முழு பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களில் வந்தே பாரத் ரயில்கள் மேம்பட்டு காணப்படுகின்றன.. நவநாகரீக சேர்கள், சுழலும் சீட்கள், புஷ்பேக் சீட்கள், வைஃபை, எல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட அத்தனை அம்சங்களுடன் உள்ளன.. இதனால் பயணிகள் வசதியாகவும், விரைவாகவும் தங்களது பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
நீண்ட தூர பயணத்துக்காக ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்களும் தற்போது தயாராகி கொண்டிருக்கின்றன.. இவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்லீப்பர் - பார்சல் ரயில் தயாரிப்புகள்
இந்நிலையில், வந்தே பாரத் ரயிலுக்கான சக்கரங்கள் தயாரிப்பில், ரயில்வே தன்னிறைவை பெற்றுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்..இது குறித்து அவர்கள் சொல்லும்போது, "வந்தே பாரத் ரயில்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர், பார்சல் ரயில் தயாரிப்புகள் முடிந்துள்ளன.. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு இவை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன.
வந்தே பாரத் ரயில் தயாரிப்பிற்கு தேவையான பொருட்களில், 15 சதவீதம் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. முக்கியமாக, சக்கரங்கள் உக்ரைனில் இறக்குமதி செய்யப்பட்டு, வந்தே பாரத் ரயில்களில் இணைக்கப்பட்டன... உக்ரைன் - ரஷ்யா போர் ஏற்பட்ட பிறகு, உக்ரைனில் இருந்து, ரயில் சக்கரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
சக்கரங்கள் - மகிழ்ச்சி
2 வருடங்களுக்கு முன்பு, வந்தே பாரத் ரயிலுக்கான சக்கரங்களை உள்நாட்டில் தயாரிக்க, பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, ரயில் வீல்ஸ் ஃபேக்ட்ரி போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் உட்பட 4 நிறுவனங்கள், வந்தே பாரத் ரயில்களுக்கான சக்கரங்களை தயாரித்தன.
இப்போது வந்தே பாரத் வகை ரயில்களுக்கான, சக்கரங்கள் கிடைப்பதில் எந்த சிக்கலும இல்லை என்பதால், தன்னிறைவை பெற்றுள்ளோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications