யாருங்க இந்த வனிதா.. இனி ஒருத்தரும் "வாலாட்ட" முடியாது.. நிம்மதி பெருமூச்சில் திருப்பூர்..!
திருப்பூர் முதல் பெண் கமிஷனராக வனிதா நியமிக்கப்பட்டுள்ளார்
சென்னை: திருப்பூர் மாநகர கமிஷனராக வி.வனிதா நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர்.. மாநகரில் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி காவல் ஆணையராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Recommended Video
நேற்றைய தினம், ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.. அந்த வகையில், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய கார்த்திக்கேயன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐஜியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து சென்னை ரெயில்வே ஐஜியாக பணியாற்றி வந்த வனிதா, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.... இதன் மூலம் திருப்பூரின் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற பெருமையை வனிதா பெற்றுள்ளார்...

கமிஷனர்
கமிஷனர் வனிதாவை பொறுத்தவரை வேலூர் சரக டிஐஜியாக, பணியாற்றியவர்.. பிறகு. சென்னை கிழக்கு மண்டல இணையர் என அடுத்தடுத்த பொறுப்புகளை வகித்தவர்.. அதேசயமம், வனிதா, காவல்துறையில் ரொம்ப பிரபலம்.. சீனியர் அதிகாரி.. தைரியமானவர்.. ஒவ்வொரு துறையிலும், துணிச்சலான நடவடிக்கைகளை தயங்காமல் எடுத்தவர்.

இலக்கியவாதிகள்
எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ் ஆர்வம் உள்ளவர்.. காவல்துறையில் இதுபோன்ற இலக்கியவாதிகள் சொற்ப அளவே இருப்பார்கள்.. ஆனால் வனிதா, பாரதியார் முதல் அனைத்து இலக்கிய நூல்களையும் கற்றவர்.. பல மேடைகளில் ஆக்கமும் ஊக்கமும் தரும் சொற்பொழிவுகளை நடத்துவார்.. இவரது பேச்சுக்கள் அனைத்தும் இளம்பெண்களுக்கு நல்ல உரமாக அமையும்.

வலிகள்
ஒருவிழாவில் இவர் பேசும்போது, "எவ்வளவு உயரத்துக்கு போனாலும், பெண் என்பவளுக்கு இந்த சமூகம் வலிகளை கொடுத்து கொண்டுதான் இருக்கும்.. எவ்வளவுதான் பதவி உயர்வு பெற்றாலும், பெண்போலீஸ் என்றுதான் சொல்கிறார்கள்.. ஆண்களை போலவே, வேலைகளிலும் வித்தியாசம் இல்லை, வாங்கும் சம்பளத்திலும் வித்தியாசம் இல்லை.. ஆனாலும் எங்களை பெண் போலீஸ் என்கிறார்கள். ஆனால் நாங்க "போலீஸ்" அவ்வளவுதான். வேறுபாடு எதுவும் இல்லை.

அக்கறை
இப்படி எங்களுக்கே இப்படின்னா, சாதாரணமாக தெருவில் நடந்து போகக்கூடிய ஒரு சாதாரண பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கும்? பாரதி சொன்னாரே, பெண்களிடம் அந்த செருக்கு வேண்டும் என்று.. அதை நான் இப்போதுவரை எந்த பெண்களிடமும் பார்க்கவில்லை.. தன்னை அழகுபடுத்தி கொள்ள அக்கறை காட்டும் பெண்கள், தன்னை பர்சனாலிட்டியாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.. தன்னுடைய சுய ஆளுமையை பெண்கள் உணர்ந்து மேலே வர வேண்டும்" என்பார்.

நெகிழ்வு
அந்த வகையில், திருப்பூருக்கு கமிஷனராக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்களுக்கான பாதுகாப்பு அங்கு நிச்சயம் என்று நம்பப்படுகிறது.. இனி ஒருத்தரும் பெண்களிடம் வாலாட்டவும் முடியாது.. ஒரு பெண் தங்கள் மாவட்டத்துக்கு முதன்முதலில் கமிஷனராகி வந்திருப்பதால் திருப்பூரே நெகிழ்ந்து கிடக்கிறது. .
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications