"சாட்டையடி ஓட்டுப்பிச்சையா?" அண்ணாமலைக்கு என்ன ஆச்சு? விசிக வன்னியரசு தாக்கு
சென்னை: சாட்டையால் அடித்து பிச்சை கேட்பவர்களை விட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு அநாகரீகமானது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வன்னியரசு தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மனிதனை மனிதன் கை ரிக்ஷா கொண்டு இழுக்கக் கூடாது என அவற்றை தடை விதித்தவர் சமத்துவப் பெரியார் கலைஞர் அவர்கள்.

அதே போல சாலைகளில் சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பவர்களை தடுத்து
மறுவாழ்வுக்கான வழிகாட்டியவர் கலைஞர் அவர்கள். இன்று தமிழ்நாட்டில் இப்படி சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பதை காண்பது அரிது.
ஆனால், பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அவர்கள் ஓட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத் தானே அடித்து கழிவிரக்கத்தை தேடுகிறார்.
தெருக்களில் சாட்டையால் அடித்து பிச்சை கேட்பவர்களை விட, அண்ணாமலையின் செயல்பாடு அநாகரீகமானது.
#எச்சரிக்கை
— வன்னி அரசு (@VanniKural) December 27, 2024
மனிதனை மனிதன் கை ரிக்ஷா கொண்டு இழுக்கக்கூடாது என அவற்றை தடை விதித்தவர் சமத்துவப்பெரியார் கலைஞர் அவர்கள்.
அதே போல சாலைகளில் சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பவர்களை தடுத்து
மறுவாழ்வுக்கான வழிகாட்டியவர் கலைஞர் அவர்கள்.
இன்று தமிழ்நாட்டில் இப்படி சாட்டையால் அடித்து பிச்சை… https://t.co/GjU7F5UwtE pic.twitter.com/WsCIdkmJw0
இப்படி செய்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அல்லது கவன ஈர்ப்புக்காக செய்பவர்களாக இருக்க வேண்டும். இதில் பாஜகவும் அண்ணாமலையும் என்ன ரகம் என்பதை மக்களே புரிந்து கொள்ளட்டும். இவ்வாறு வன்னியரசு தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்து இன்று காலை போராட்டம் நடத்தினார்.
கோவை காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன் இன்று காலை 10 மணிக்கு தொண்டர்கள் முன்னிலையில் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். 6 அடி அடித்துக் கொள்வதாக கூறிய நிலையில் 7ஆவது அடியையும் அடித்துக் கொண்டார். பிறகு 8ஆவது அடியை அடிக்கும் போது தொண்டர்கள் ஓடி வந்து அவரை கட்டியணைத்துக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.
இதுகுறித்து அண்ணாமலை கூறுகையில் இன்று நாங்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டம் இன்னும் தீவிரமடையும். இது தனி நபருக்கு எதிரான போரட்டம் அல்ல. தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்துள்ளது. பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது.
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே இந்தப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். எதற்காக 6 முறை சாட்டையடி என நீங்கள் கேட்கலாம். முருகப்பெருமானிடம் இந்த ஆறு சாட்டையடி மூலம் ஒரு வேண்டுதல் வைத்துள்ளோம்.
நம் தமிழ் மண்ணில் உடலை வருத்தி இறைவனிடம் வைக்கப்படும் வேண்டுதலுக்கு ஒரு விளைவு இருக்கும் என்பது நம்பிக்கை. நான் அந்த மரபையே பின்பற்றி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன். தெரிந்தோ தெரியாமலோ நாங்களே கூட ஏதேனும் தவறு செய்திருக்கலாம். அதற்குக் கூட இது தண்டனையாக இருக்கட்டும்.
காவல்துறையில் எஃப்ஐஆர் கசிவது என்பதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்திருக்கிறேன். எஃப்ஐஆர் பிரதி ஒரு நகல் நீதிமன்றத்துக்கும், ஒரு நகல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கொடுக்கப்படும். இந்நிலையில் முதல் தகவல் அறிக்கையை யாரோ வேண்டுமென்றே பதிவிறக்கம் செய்து பரப்பியிருக்க வேண்டும்.
2026 தேர்தலில் தோற்றாலும் கூட நான் கவலைப்பட மாட்டேன். நான் சாராயம் விற்ற காசிலும், கமிஷன் காசிலும் தேர்தலை எதிர்கொள்ளவில்லை. மாறாக விவசாயத்தில் வந்த காசை வைத்து நேர்மையாக தேர்தலை எதிர்கொண்டேன்.
லண்டன் சென்று திரும்பியபின் என் அரசியல் பார்வை மாற்றம் பெற்றுள்ளது. மற்றபடி என்னைப் பற்றி சமூகவலைதளங்களில் விமர்சிப்பவர்கள் பற்றி எனக்குக் கவலையில்லை என்றார்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications