'பாமக துவங்கி 42 ஆண்டுகளுக்கு மேலாகியும்.. வன்னியர் மக்கள் என் பின்னால் வரவில்லை'.. ராமதாஸ் வேதனை!
சென்னை: காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பெ.மகேஷ்குமார் தலைமை தாங்கினார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, கட்சியின் நிர்வாகிகள் பலர் கொண்டனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கட்சியினர் மத்தியில் பேசிய ராமதாஸ் கூறியதாவது:-

வன்னியர்கள் யாரும் இல்லை
கடந்த இரு ஆண்டுகளாக தொண்டர்களை சந்திக்க முடியாமல் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன்.தற்போது கொரோனா வந்தாலும் பரவாயில்லை.இனிமேலாவது தொண்டர்களை ஒவ்வொரு மாவட்டமாக சென்று சந்திக்க முடிவு செய்துள்ளேன்.இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்களில் இதுவரை யாரும் வன்னியர்கள் இல்லை.

வன்னியர் மக்கள் என் பின்னால் வரவில்லை
பாமக துவக்கி 42 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒட்டுமொத்த வன்னியர் மக்கள் என் பின்னால் வரவில்லை. என்ன காரணம் என ஆராயும்போது நாம் ஒன்று சேர கூடாது என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள் வன்னிய மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. வன்னியர் சமுதாய மக்கள் மாறி,மாறி பல்வேறு கட்சியினருக்கும் வாக்களிப்பதால் தான் பெரும்பான்மையான சமூகமாக இருந்தும் நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை.

நீதிமன்றம் தவறான தீர்ப்பு
பல கட்சிகளிலும் பிரிந்து கிடப்பவர்கள் ஒருமுறையாவது பாமகவுக்கு வாக்களித்தால் தான் நமது கட்சியின் பலம் பிறருக்கு தெரிய வரும்.மற்ற சமுதாயத்தினர் அன்புமணி முதல்வராகி விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழக்கில் நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.இது வேண்டுமென்றே செய்யப்பட்ட அநியாயமான தீர்ப்பாகும்.

எரிகிற கொல்லி கட்டையை...
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாம் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறோம்.வரும் பிப்ரவரி மாதத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். 18 வயதுக்கு மேற்பட்ட உள்ளவர்கள் வாக்குரிமை உள்ளவர்கள். பாமகவுக்கு வாக்கு செலுத்தவில்லை என்றால் உங்கள் தலையிலேயே எரிகிற கொல்லி கட்டையை பொட்டுகொள்ளும் நிலை ஏற்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications