கள்ள கிறிஸ்தவர் விஜய்.. RSS கும்பலால் இறக்கி விடப்பட்ட யூதாஸ் காரியேத்து! பைபிளை காட்டிய வன்னியரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலுக்கு முன் கோவிலுக்கு சென்றால் கிறிஸ்தவர்களின் வாக்கு கிடைக்காது என்பதால் தான் தேர்தல் முடிந்ததும் கோவிலுக்கு சென்று இருக்கிறார் விஜய் எனவும், ஆர்எஸ்எஸ் களம் இறக்கி உள்ள யூதாஸ் தான் விஜய் என மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் விசிகவின் வன்னியரசு.

தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் தற்போது சற்று அமைதியான சூழல் நிலவுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கின்றனர் அரசியல் கட்சியினர். இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் இன்று திடீரென திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசித்தார்.

Tamil Nadu Assembly Election 2026 TN Polls Vanniyarasu Vijay Temple

இது ஒரு பக்கம் ஆதரவையும் மறுபக்கம் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது திருச்சிக்குச் சென்ற விஜய் அங்கு தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார். இந்த நிலையில் இதை தான் விமர்சித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னியரசு.

தேர்தலுக்கு முன் கோவிலுக்கு சென்றால் கிறிஸ்தவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் தான் தேர்தல் முடிந்ததும் விஜய் கோவிலுக்கு சென்றிருக்கிறார் எனவும், ஆர்எஸ்எஸ் என்ற கும்பலால் களம் இறக்கப்பட்டுள்ள யூதாஸ் காரியேத்து தான் விஜய் எனவும் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," பாஜகவின் எச்.ராஜா என்பவர் மூச்சுக்கு முன்னூரு முறை ஜோசப் விஜய் என முன்மொழிந்து கொண்டே இருந்தார்.

அதையே வேட்பாளராக தன்னை அறிவிக்கும் போது பெருமையோடு வழிமொழிந்தார். அதாவது, சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு போகக்கூடாது என்னும் உத்தியை நடிகர் விஜய் அவர்களும் பாஜகவும் சேர்ந்து நடத்தியது இப்போது அம்பலமாகிறது. திருச்சி தேவாலயம் ஒன்றில் மண்டியிட்டு வணங்கியதும் கிறித்தவர்களின் வாக்குகளை குறிவைப்பதற்கான உத்தியாகவே அமைந்துள்ளது.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையை சார்ந்த சில பாதிரிமார்கள் நடிகர் விஜய் அவர்களை நம்பி ஏமாந்துள்ளனர். இப்போது, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அதிகாலை சென்று முருகப்பெருமானை வழிபட்டுள்ளார் நடிகர் ஜோசப் விஜய். தேர்தலுக்கு முன்பு முருகன் கோவிலில் மண்டியிட்டிருந்தால் நம்பியிருந்த சில கிறிஸ்தவர்களும் வாக்களித்திருக்க மாட்டார்கள்.

இப்போது எந்த கிறிஸ்தவனுக்கும் அஞ்ச வேண்டியதில்லை என்பதால் முருகனிடம் மண்டியிட்டுள்ளார் ஜோசப் விஜய். வாக்குகளை பிரிக்கவே #RSS கும்பலால் இறக்கி விடப்பட்டுள்ள யூதாஸ் காரியேத்து தான் விஜய் என்பதை இப்போதாவது கிறித்தவர்கள் புரிந்து கொள்வார்களா? "ஏனெனில், கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, முடிந்தால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் ஏமாற்றுவதற்குப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டுவார்கள்" -மத்தேயு 24:24 கள்ள கிறிஸ்தவர் தான் விஜய் என்பதை தாண்டி சங் பரிவாரத்தின் கள்ளக்குழந்தை தான் என்பதையும் இனி நாடறியும்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+