விஏஓ லூர்து பிரான்சிஸ் படுகொலை.. கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவோம்..டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையில் தமிழகமெங்கும் தங்கு தடையின்றி நடைபெறும் மணல் கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவதே அவருக்கு செலுத்தும் அஞ்சலி என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார். கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த களத்தில் இறங்கி பணியாற்றும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்சிஸ் நேற்று தனது அலுவலகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென அலுவலகத்திற்குள் புகுந்த இருவர், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலைக்கு அரசியல் கட்சித்தலைவர்களும் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், தான் முன்பு பணியாற்றிய இடங்களிலும் தற்பொழுது பணியாற்றிய இடத்திலும் மணல் கனிம வளம் உள்ளிட்ட அரசு சொத்துக்களை பாதுகாப்பதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லாமல் பணியாற்றி அனைவராலும் பாராட்டப்பட்டவர். அவர், தான் பணியாற்றி வந்த முறப்பநாடு எல்லைக்கு உட்பட்ட தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாத மணல் கொள்ளையர்கள் இப்பொழுது அவரையே வெட்டி சாய்த்து இருக்கிறார்கள்.
லூர்து பிரான்சிஸ் அவரின் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம். அதே நேரம் இந்த நஷ்ட ஈடு மட்டுமே தீர்வாகாது என்கிறார்.
தொடர்ந்து அது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி லூர்து, பிரான்சிஸ் கொலையில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்து இந்த வழக்கை விரைந்து முடித்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவது தமிழகத்தில் இதுபோன்ற மணல் உள்ளிட்ட கனிம வளக் கொள்கையை கொள்ளைகளை அறவே தடுத்து நிறுத்துவதும் தான் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்களுக்கு செலுத்தக்கூடிய உண்மையான மரியாதை ஆகும் என்கிறார்.
தாமிரபரணி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த களத்தில் இறங்கி பணியாற்றும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications