அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை டிஸ்மிஸ் செய்க- திருமாவளவன்
சென்னை: அரசியல் சட்டத்துக்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் எம்பி இன்று வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அப்பட்டமாக அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதன் உச்சகட்டமாக அமைச்சர் ஒருவரைப் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்து பின்னர் ஐந்து மணி நேரத்தில் அதை நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கு இருக்க வேண்டிய நிதானமும், மாண்பும், அரசியல் சட்டத்தை மதிக்கும் பண்பும் ஆர்.என். ரவி அவர்களிடம் இல்லை. தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டுவருகிற அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

164-வது பிரிவு சொல்வது என்ன? அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் 164 இல் ஒரு அமைச்சரை நியமிக்கவும், அவரது துறையை மாற்றவும், அவரைப் பதவி நீக்கம் செய்யவும் முதலமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையின் படி ஆளுநர் அதை அறிவிக்க வேண்டும். ஆளுநரின் அதிகாரம் அவ்வளவுதான். இதற்கு மாறாக ஆளுநரே ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்வது இந்தியாவில் முதன்முறையாக அரங்கேறியுள்ள கேலிக்கூத்தாகும்.
356-வது பிரிவு: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் எத்தனையோ மாநில அரசுகள் ஒன்றிய அரசால் கலைக்கப்பட்டிருக்கின்றன. அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 356 ஐப் பயன்படுத்தி விருப்பம் போல மாநில அரசுகளைக் கலைப்பதற்கு உச்சநீதிமன்றம் 1994 ஆம் ஆண்டு எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் பல தடைகளை விதித்தது. அதன் பிறகு அப்படி மாநில அரசுகளைக் கலைப்பது குறைந்து விட்டது.
முதல் முறை: இந்தியா சுதந்திரமடைந்து இந்த 75 ஆண்டுகளில் மாநில அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தாலும் ஒரு மாநில அமைச்சரை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ததாக எந்த முன்னுதாரணமும் கிடையாது. ஏனென்றால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லை. இதுவரை முன்னுதாரணம் இல்லாத ஒரு நடவடிக்கையை ஆளுநர் மேற்கொள்ளும் போது அதற்குரிய சட்ட ஆலோசனைகளை அவர் பெற்றிருக்க வேண்டும். ஒன்றிய அரசைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும். இது எதையும் செய்யாமல், அரசியலமைப்புச் சட்டத்தைப்பற்றிய புரிதலும் இல்லாமல் ஆர்.என்.ரவி அவர்கள் எடுத்த நடவடிக்கை இப்பொழுது ஒன்றிய அரசுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது.
மனநிலை என்ன? : ஆளுநரின் நிதானமற்ற அணுகுமுறையைக் கண்டு 'இவர் சீரான மனநிலையில் தான் இருக்கிறாரா?' என்று ஐயப்படுகின்றனர். இத்தகைய தன்மை கொண்ட ஒருவரை ஆளுநர் போன்ற அரசியலமைப்புச் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் நீடிக்க விடுவது இந்திய நாட்டுக்கே கேடாக முடியும். எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், இனிமேல் ஆளுநர்களை நியமிக்கும் போது 'பூஞ்சி கமிஷன்' அளித்துள்ள பரிந்துரையின்படி மாநில முதல்வர்களைக் கலந்தாலோசித்து நியமிக்க வேண்டும் என்றும் ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறோம்.
ஆளுநரின் நடவடிக்கையால் எழுந்துள்ள சட்டரீதியான பிரச்சனையை, குறிப்பாக,அரசமைப்புச் சட்டத்தைச் சிக்கலுக்குள்ளாக்கும் நிலையை, நீதிமன்றம் மூலம் எதிர்கொள்வதோடு, ஆர்.என்.ரவி அவர்கள் விடுத்துள்ள அரசியல் ரீதியான சவாலை மக்கள் மன்றத்தில் எதிர்கொள்வதற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் எம்பி கூறியுள்ளார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்?












Click it and Unblock the Notifications