சக்சஸ்.. ஸ்டாலினை பார்த்ததுமே பூரிப்பு திருமாவளவனுக்கு.. குஷியில் திமுக - விசிக.. ஏமாந்து போன அதிமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுகவுடன் இன்று கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும்நிலையில், விசிக தலைவர் திருமாவளவனுடன் முதல்வர் ஸ்டாலின் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதையடுத்து, விசிக - திமுக கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. அந்தவகையில் விசிகவுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியை பொறுத்தவரை, அதிக கட்சிகள் இடம்பெற்றுள்ளன.. வலுவான, பலமான கூட்டணியாகவும் விளங்குகிறது.. ஆனாலும் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

VCK contest in 2seats in DMK Alliance and Did MK Stalin says Happy news to Thirumavalavan in Chennai Arivalayam

4 கட்சிகள்: 2 கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.. 4 கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. விசிக, மதிமுக, காங்கிரஸ் என 3 கட்சிகளின் பேச்சுவார்த்தைகள் இழுபறியில் உள்ளன.

விசிகவுக்கு 2 சீட் மட்டுமே ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. கடந்த முறை போல அல்லாமல், 2 தனித்தொகுதியில் தனி சின்னத்தில் போயிடவும் வாய்ப்பு தந்துள்ளது. எனினும், இன்னொரு சீட் வேண்டும் என்று விசிக கேட்டு வருவதால், உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் உள்ளது..

பொதுத்தொகுதி: கூடுதலாக ஒரே ஒரு தொகுதியை கேட்டாலும், அதுவும் பொதுத்தொகுதியே என்பதாலும், உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவும் தயார் என்றும் விசிக சொல்வதால், இது திமுகவுக்கும் சிக்கலை தராது என்கிறார்கள்..

எனினும், தொகுதி பங்கீட்டு குழுவானது, தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட திருமாவை அழைத்தும், அவர் செல்லவில்லை. அதற்கு பதிலாக உயர் மட்டக் குழுவை கூட்டி சில முக்கிய முடிவுகளை எடுத்திருந்தார்... குறிப்பாக, 2 தனி தொகுதி + 1 பொதுத்தொகுதியை திமுகவிடம் கேட்டு பெறுவது என்று முடிவானது.

விசிக இழுபறி: அதுமட்டுமல்ல, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசிவிட்டால், அனைத்து சுமூகமாக முடிந்துவிடும் என்றும் விசிக நம்பிக் கொண்டேயிருந்தது. எனவே, முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து இதுகுறித்து விளக்க முடிவு செய்யப்பட்டு, அப்பாயிண்மென்ட் கேட்டும் காத்திருந்தார்.

ஆனால், கடந்த 2 நாட்களாகவே அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், திமுக மேலிடத்திலிருந்து விசிகவுக்கு அழைப்பு வரவில்லை..

திருமாவளவன்: இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில், விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.. கூட்டணி இழுபறி இருந்து வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் திருமாவளவனுடன் முதல்வர் ஆலோசித்துள்ளார்.

முன்னதாக, கூடுதல் தொகுதி கேட்டு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசுவோம் என்று திருமாவளவன் தெரிவித்த நிலையில் இன்று சந்திப்பு நடந்துள்ளது.. ஆனால், இதில், 3 தொகுதிகள் என்பதை முதல்வர் பரிசீலிப்பாரா? வெறும் 2 தொகுதிகள் மட்டுமே விசிகவுக்கு ஒதுக்கப்படுமா? என்பது தெரியாமலேயே இருந்தது.

கையெழுத்து: இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - விசிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் இன்று சென்னை அறிவாலயத்தில் கையெழுத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில், திமுக கூட்டணியில், மதிமுக போலவே, விசிகவின் தொகுதி பங்கீட்டு பிரச்சனை இன்றைய தினமே ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, விசிகவுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+