Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்போரூர் கந்தசாமி கோவில் தேர் பூர்வகுடிகளான தலித்துகள் பகுதிக்கு வராதோ? விசிகவின் புது சர்ச்சை!

திருப்போரூர் கந்தசாமி கோவில் தேர் தலித் கிராமங்களுக்கும் செல்ல வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருப்போரூர்: புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசாமி திருக்கோவில் தேர், அம்மண்ணின் பூர்வகுடிகளான தலித்துகள் பகுதிக்கும் வரவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் கவுன்சிலர் பாரதி சமரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிக்கு கோரிக்கை மனுவையும் அனுப்பி வைத்துள்ளார் பாரதி சமரன்.

இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனு விவரம்: மரபுரி, யுத்தபுரி, போரியூர், செருவூர், சமராபதி, சமதளப்பூர் எனும் மங்கா புகழ் கொண்ட திருப்போரூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கவுன்சிலராக மக்கள் பணியாற்றி வருகின்றேன். தொண்டை மண்டலத்தை சேர்ந்த குமிழி நாட்டின் கலாச்சார மையமான திருப்போரூரில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்றோம். இவ்வூரின் பூர்வீக குடிமக்கள் நாங்கள்.

VCK Demands Thiruporur Murugan Temple Chariot Should go through Dallits Villages

ஆங்கில பொறியாளர் காலின் மெக்கன்சி (Colin Mackenzie, 1754 - 1821) அவர்களின் உத்தரவின் படி தாமஸ் பார்னார்டு மற்றும் ராசா ஸ்ரீ செங்கல்வராய முதலியார் ஆகியோர் நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் எமது முன்னோர்கள் பராமரிக்க முடியாத நிலபுலன்களுடன் மற்ற சமூகத்தினருக்கும் சமமாக வாழ்ந்து வந்தவர்கள் என்பது தெரியவருகிறது. ஓலை சுவடி துறை ஆவணங்கள் கட்டு எண் - 44 அ ). 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் எமது ஊருக்கு வந்த முதல் ஆதீனம் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் இந்த ஊரின் பிரசித்திப்பெற்ற அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் ஜீரனோதாரம் எனும் மறுசீரமைப்பு செய்தார். கோயில் ஜீரனோதாரம் பெறுவதற்கு காரணமாக இருந்த முதல் ஆதீனம் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் மற்றும் அவரை தொடர்ந்து வந்த பரம்பரை ஆதீனங்களை ஆதரித்தும், அவர்களுடன் சேர்ந்து உழைத்தும் இந்த முருகன் கோயிலை கட்டுவதற்கு, குளம் அமைவதற்கு, கோயில் வளர்ச்சியடைவதற்கு காரணமாக இருந்தவர்கள், உழைத்தவர்கள் எமது முன்னோர்கள். திருக்கோயிலும் திருக்குளமும் எங்கள் உழைப்பால் உருவானவை.

மேலும் தினமும் கோயிலுக்கு விளக்கு ஏற்றுவது தெருவை கூட்டி துப்புரவு செய்வது, காவல் காப்பது போன்ற கோயில் திருப்பணிகளை தொடர்ந்து காலம் காலமாக செய்துவந்ததின் பயனாக தெருபெருக்கி மான்யம், விளக்கு ஏற்றி மான்யம் போன்ற மான்யங்கள் அன்றைய கோயில் நிர்வாகத்தால் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரும் கலாச்சார மையமாக திகழ்ந்துவந்த திருப்போரூரில் மற்ற சமூகத்தினரை போலவே பறையர் சமூகமான எங்களுக்கும் பறையன் சத்திரம் / பறையன் குளம் / பறையன் மண்டபம் என இன்றளவும் உள்ளன.

VCK Demands Thiruporur Murugan Temple Chariot Should go through Dallits Villages

திருப்போரூர் முருகன் கோயில் பிரம்மோற்சவ விழாவிற்கு முன்னதாக கிராம காவல் தெய்வமான முண்டச்சி அம்மன் தாய்வீடான எங்கள் சேரி பகுதிக்கு வந்து முதல் மரியாதை பெற்ற பின்னர்தான் முருகன் கோயில் பிரம்மோற்சவ விழாவே நடைப்பெறுவது வழக்கம். மறைந்த இரண்டு ஆதீனங்களுக்கு முன்பு வரை எங்கள் மக்கள் விழாக்காலங்களில் சாமி தூக்கும் பாதம் தாங்கிகளாகவும் கோடிகளாகவும் இருந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நடைப்பெற்று வரும் திரௌபதி அம்மன் கோயில் விழாவில் நாங்கள் உபயதாரர்களாக இருந்து, ஒரு நாள் விழாவை ஏற்று மிகவும் சீரோடும் சிறப்போடும் நடத்திவருகின்றோம்.

VCK Demands Thiruporur Murugan Temple Chariot Should go through Dallits Villages

இவ்வாறு இறைப்பணிகளும் அறப்பணிகளும் செய்து இந்த மண்ணிற்கு பெரும் உரிமை கொண்டவர்களாக காலம் காலமாக இருந்துவருகின்றோம். ஆகவே சாமி தூக்கும் நான்கு நான்கு கோடிகளில் ஒரு கோடியாக மீண்டும் எங்களை அங்கீகரித்தும், கோயில் பணியாளர்களில் அரசு நிர்ணயித்துள்ள இடஒதுக்கீடு விகிதாச்சார அடிப்படையில் எங்களுக்கு பிரதிநித்துவம் வழங்கியும், மேலும் மேற்குறிப்பிட்ட எங்கள் வம்சாவழியினருக்கு சொந்தமான பறையன் சத்திரம் / பறையன் குளம் பறையன் மண்டபம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி எங்களின் சொந்த செலவில் அவைகளை மறுசீரமைக்க போதிய ஒத்துழைப்புகளை வழங்கிடவும் மேலும் கடந்த நூற்றாண்டுகளாக முருகன் கோயில் பிரம்மோற்சவ விழாவின் போது மாடவீதிகளிலும் ஊர் தெருக்கள் வழியாகவும் அருகில் உள்ள தண்டலம் ஆலத்தூர் போன்ற பக்கத்து கிராமங்களுக்கும் சென்று வருகின்ற செந்தமிழ் கடவுள் முருகப்பெருமானின் உற்சவர் தேர் ஒவ்வொரு ஆண்டும் எங்களது ஆதிதிராவிடர் பகுதிக்கும் வந்து பக்தர்களை பொதுமக்களை காத்து அருளாசி வழங்கிட இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் நிர்வாகத்திற்கு உத்திரவிட்டு சமூக நீதி காத்திட வேண்டும் கேட்டுக்கொள்கின்றோம். என பொதுமக்கள் சார்பில் இதன்மூலம் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+