ஈழத் தமிழர் படுகொலை..விசிகவிடம் 'அப்படி' சொன்னாரா நடிகர் விஜய்? 13 ஆண்டுகளுக்கு முந்தைய வீடியோ ஷேர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈழத் தமிழர் இனப்படுகொலைக்காக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 11 ஆண்டுகளுக்கு முன்னர் கையெழுத்தியக்கம் நடத்திய போது நடிகர் விஜய்யும் அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரும் கையெழுத்திட மறுத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக செயற்குழுவில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த வீடியோ பகிரப்படுகிறது.

சென்னையில் இன்று நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் மத்திய அரசுகளுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

vck tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் 2011-ம் ஆண்டு நிகழ்வு ஒன்றின் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டனை பெற்று தர வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. திரை உலக பிரமுகர்கள் இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்கே செல்வமணி, நடிகை ரோஜா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் இதில் கையெழுத்திட்டனர்.

vck tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

அப்போது நடிகர் விஜய்யை சந்தித்து கையெழுத்து பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தலைமையில் படப்பிடிப்பு தளம் ஒன்றுக்கு சென்றனர். அங்கு விஜய்யை சந்தித்து கையெழுத்து கேட்ட போது I am not intrested என விஜய் கூறியிருக்கிறார். இதேபோல விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரையும் தொடர்பு கொண்டு கையெழுத்து கேட்க அவரும் கையெழுத்திட மறுத்துள்ளார். இது தொடர்பாக வன்னி அரசு அப்போது டிவி சேனல்களுக்கு அளித்த பேட்டி வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+