சாதி பற்றாளர்கள் எல்லாம் சனாதன கைக்கூலிகள் அல்ல.. மேலவளவு சர்ச்சை.. திருமாவளவன் பரபர கருத்து
சென்னை: சமீபத்தில் மதுரை மேலவளவில் நடைபெற்ற மேலவளவு நினைவு நாள் நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பேசியது விவாதங்களை எழுப்பியது. இதனையடுத்து தன்னுடைய கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். அதேபோல குறிப்பிட்ட அமைப்பு தனக்கு எதிராக திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 30ம் தேதி மேலவளவில் விசிக சார்பில் 'மேலவளவு நினைவுநாள்' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திருமாவளவன் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில வார்த்தைகளை கூறியிருந்தார். இருப்பினும் தன்னுடைய இந்த கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் கூறியிருந்தார். ஆனால், சில மாற்றுத்திறனாளி அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.

குறிப்பாக நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்க, பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் அஷ்ரப், வீடியோ ஒன்றை வெளியிட்டு "மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேச எப்படி மனம் வந்தது? உங்கள் வீட்டில் ஒரு மாற்றுத்திறனாளி இருந்தால் இப்படி பேசுவீர்களா? மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண ஆசை வரக்கூடாதா?
சமூக நீதி பேச்சாளராக உள்ள நீங்கள் மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் வகையில் இப்படி பேசலாமா? தாங்கள் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். கேட்கவில்லை என்றால், மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்" என கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து திருமாவளவன் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவில்,
"கடந்த 30 அன்று மேலவளவில் நடந்த 'மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல்' நிகழ்வில் உரையாற்றும் போது மாற்றுத் திறனாளிகள் மனம்நோகும் வகையில் ஓரிரு சொற்கள் தவறி விழுந்துவிட்டன. அப்போதே அதற்கு எனது வருத்தத்தையும் தெரிவித்தேன். மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
நான் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளைக் காயப்படுத்தும் உள்நோக்கமோ, அவர்களைப்பற்றி இளக்காரமான மதிப்பீடோ கொண்டவனுமில்லை. இதனை மாற்றுத் திறனாளிகளுக்கான இயக்கத்தை நடத்தும் முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் அறிவர். என்னைப்பற்றி தனிப்பட்டமுறையில் அவதூறுபரப்பும் ஒருசில அற்பர்களைக் கண்டிக்கும் வகையில் நான் ஆதங்கப்பட்டு எனது உரையின் போக்கிலேயே தன்னிலை விளக்கம் அளித்தேன்.
அப்போது அச்சொற்கள் என்னையும் அறியாமல் தவறுதலாக நா தவறி வந்து விழுந்தன. அதற்காக உடனே எனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன். இனி அவ்வாறு நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன். வருந்துகிறேன். மாற்றுத்திறனாளிகள் தோழர்கள் பொறுத்தருளவும்" என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து மற்றொரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார். அதில், குறிப்பிட்ட அமைப்பு தனக்கு எதிராக திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதாவது, "சனாதன- சங்பரிவார் கும்பலின் கைக்கூலிகளில் ஒருசிலர் அண்மைக் காலமாக பறையர் அமைப்பு என்னும் பெயரில் விசிக'வுக்கு எதிராகவும் தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராகவும் திட்டமிட்டு வீண் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். அவர்கள் வெளிப்படையாக பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரோடும் சங்கராச்சாரியாரோடும் தொடர்பு வைத்துக்கொண்டே, அவர்கள் வகுத்துத் தரும் வேலைத்திட்டத்தின் படி செயல்பட்டு வருகின்றனர்.
அந்த சனாதன அற்பர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெயரையும் பாட்டனார் ரெட்டமலை சீனிவாசன், பண்டிதர் அயோத்திதாசர் ஆகியோரின் பெயரையும் பயன்படுத்திப் பிழைப்பு நடத்துகின்றனர். அந்தக் கும்பலைத்தான் மேலவளவு நிகழ்வில் கண்டித்தேன். பறையர் அமைப்புகளைச் சார்ந்த உண்மையான அம்பேத்ரியவாதிகளை அல்ல. சாதிப் பற்றாளர்கள் எல்லோரும் சனாதனக் கைக்கூலிகள் அல்ல.
சனாதன கைக்கலிகளைத் தான் அடையாளம் காண வேண்டும். இது தேசத்தையே சனாதனப் பயங்கரவாதம் சூழும் பேராபத்தான காலமாகும். எனவே சனநாயக சக்திகள் யாவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications