திருமாவளவனுக்கு ஒரு மாதம் கம்ப்ளீட் ரெஸ்ட்! பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை! வெளிநாடு? வெளிமாநிலம்?
சென்னை: டைஃபாய்டு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவன் அடுத்த ஒரு மாத காலத்துக்கு முழு ஓய்வில் இருக்க திட்டமிட்டுள்ளார்.
கட்சிக்காரர்கள், கட்சிப்பணிகள், அரசியல் நிகழ்வுகள் என எல்லாவற்றிலிருந்தும் ஒரு மாத காலம் ஒதுங்கியிருக்க முடிவெடுத்துள்ள அவர் அடுத்த ஒரு மாத காலம் உடலையும், மனதையும் புத்துணர்வு பெற வைக்கும் வகையில் தியானம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபடவுள்ளாராம்.

சிறுத்தை பதுங்குவது பாய்வதற்கு தான் எனக் கூறும் அவருக்கு நெருக்கமானவர்கள், ஒரு மாதத்திற்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் களமாடும் திட்டத்தை கையில் வைத்திருக்கிறார் என்கிறார்கள். கடந்த முறையை போல் இல்லாமல் இந்த முறை 3 தொகுதிகளை திமுகவிடம் கேட்டு வாங்கும் யோசனையில் உள்ள திருமாவளவன் அதற்கான காய் நகர்த்தலிலும் ஈடுபட்டுள்ளார்.
விசிகவின் கட்டமைப்பு வலிமைப்படுத்தப்பட்டுள்ளதையும், உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் புள்ளி விவரங்களுடன் திமுகவிடம் எடுத்துச்சொல்ல தயாராகி வருகிறார். இதனிடையே விசிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
திருமாவளவன் தொடர் அலைச்சல், பயணம், என இருப்பதால் நுரையீரல் தொற்று பிரச்சனையும் அவ்வப்போது அவதிப் படுத்துவதால் கேரளாவில் அதற்கான இயற்கை சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு ஓய்வெடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே திருமாவளவன் ஓய்வு குறித்து அவருக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவரிடம் நாம் பேசிய போது, ''தலைவர் ஒரு மாதம் ஓய்வெடுக்கப் போவது உறுதி. வெளிநாட்டிலா, வெளிமாநிலத்திலா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் இல்லை. இங்கிருந்தால் தொண்டர்கள், நிர்வாகிகளை சந்திக்காமல் இருக்க முடியாது.'' என்று மட்டும் கூறினார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துரை வைகோ, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் திருமாவளவனை அவர் சிகிச்சை மேற்கொண்டு வரும் சூர்யா மருத்துவமனைக்கே சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். டிஸ்சார்ஜ் ஆகிய பிறகு நலம் விசாரிக்க வேண்டி கட்சி நிர்வாகிகள் அதிகம் சென்னைக்கு படையெடுப்பார்கள் என்பதால் தான் இந்த குறைந்தநாள் ஓய்வுத் திட்டமாம்.
-
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications