பாஜகவுடன் கூட்டணி.. அதிமுக பற்றி கவலை கொள்வது ஏன்? திருமாவளவன் வெளிப்படையாக சொன்ன விளக்கம்!
ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுகவின் கட்டுக்குள் பாஜக இருந்திருக்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் கால்பதிக்க அதிமுகவை விழுங்கி செமிக்க கூடிய வகையில் பாஜக செயல்படுவதால், அதிமுகவை எச்சரிக்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மோடியா? லேடியா? என்று ஜெயலலிதா கேட்ட நிலையில், தற்போது இரு தலைவர்களும் அடுத்தடுத்து பாஜகவை சந்திக்கும் நிலை இருப்பதாக விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்குள் முழுமையாக அதிமுக சென்றது. இதனை அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே, திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

திருமாவளவன் வாழ்த்து
இதுகுறித்து திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வை தொடங்கிய பழனிசாமி, இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்கு மட்டுமே பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே என்று குறிப்பிட்டிருந்தார்.

திருமாவளவன் விளக்கம்
சில வாரத்திற்கு முன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்திருந்தார். இதனால் திமுகவுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் திருமாவளவன் அதிமுகவுக்கு வாழ்த்து கூறியதாக விமர்சிக்கப்பட்டது. இதுதொடர்பாக பேசிய திருமாவளவன், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் எண்ணம் விசிகவுக்கு இல்லை என்றும், அதிமுக பற்றிய வருத்தம் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார்.

அதிமுக தோளில் பாஜக
பின்னர் அதிமுக பற்றிய வருத்தத்திற்கான காரணம் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுகவின் தோளில் ஏறி தமிழ்நாட்டில் கால்பதிக்க பாஜக முயற்சித்து வருகிறது. அது மிகவும் ஆபத்தானது. ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவால் இதுபோல் செயல்பட முடியாது. கூட்டணி என்று அடிப்படையில் ஜெயலலிதா முடிவை எடுத்திருந்தாலும், பாஜகவின் கட்டுக்குள் அதிமுக சென்றிருக்காது.

மோடியா? லேடியா?
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக மீதான விமர்சனத்தை பின் வைத்துவிட்டு, மோடியா? லேடியா? மோதி பார்க்கலாம் என்று கோஷமிட்டார். அதுமட்டுமல்லாமல் ஒரு படி மேல் என் வாழ்வில் செய்யக் கூடாத தவறை செய்துவிட்டேன். அந்த பிழைக்கு பரிகாரம் செய்யும் வகையில் தான் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தேன். இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க மாட்டோம் என்று ஆவேசமாக ஜெயலலிதா தெரிவித்தார்.

பாமக, பாஜக கட்சிகள்
ஆனால் இன்று ஒட்டுமொத்த அதிமுகவும் பாஜகவை நம்பி கிடக்கிறது. இருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு பாஜகவினரை சந்திக்கிறார்கள். இந்த பலவீனத்தை பயன்படுத்தி பாஜகவையே விழுங்கி செமிக்க கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. அது அதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படுத்தும். பாஜக மற்றும் பாமக கட்சிகள் இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது. அது எங்களின் கொள்கை முடிவு என்று தெரிவித்தார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications