"ஊட்டி ஆளுநர் மாளிகையை காலி செய்யுங்க.." சட்டசபையில் ஆவேசமான விசிக சிந்தனை செல்வன்
சென்னை: உதகையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையை காலி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்; தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னையில் அமைச்சர்கள் குடியிருக்கும் கிரீன்வேஸ் சாலையில் ஒரு இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் வலியுறுத்தினார்.
தமிழக சட்டசபையில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநருக்குப் பதில் மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தாக்கல் செய்திருந்தார். இம்மசோதாவுக்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இம்மசோதா மீதான விவாதத்தில் பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
பண்ருட்டி வேல்முருகன் (த.வா.க): பறிக்கப்பட்டு வரும் மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் தமிழக முதல்வரின் முயற்சிக்கு நன்றி. இந்த சட்ட திருத்த மசோதாவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனதார வரவேற்கிறது. குஜராத், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உள்ளது. அதே நிலையைத்தான் தமிழக அரசும் கொண்டு வந்துள்ளது. இது மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் செயல். மாநில உரிமைகளை பறிகொடுப்பது போல் துணைவேந்தர்களாக கடந்த ஆட்சியில் வேற்று மாநிலத்தவர் கொண்டுவரப்பட்டனர். இதற்கு முடிவுகட்டுகிறது இந்த சட்ட திருத்த மசோதா.

கொ.ம.தே.க, மமக வரவேற்பு
ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி): ஆளுநர் விவகாரம் என்பது அண்ணா காலத்தில் இருந்து வருகிறது. இந்த விவகாரத்துக்கு இதுவரை தீர்வு காணப்படாமல் இருக்கிறது. தமிழகத்தின் சூழ்நிலையை திடீரென்று வருகிற ஆளுநரால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? தமிழக அரசின் தற்போதைய இந்த முன்னெடுப்பு முயற்சி அத்தனை மாநிலங்களுக்கும் பயன்தரக் கூடியதாக அமைய வேண்டும். ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் இனி என்கிற இத்தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இந்த தீர்மானம் ஏன் என்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக விளக்கி இருக்கிறார். துணைவேந்தர்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான், முதல்வர்தான் நியமிக்க வேண்டும். சின்னப்பா(மதிமுக): இத்தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம். மாநில அரசின் உரிமையைக் காப்பாற்றுகிற இத்தீர்மானத்தை மதிமுக வரவேற்கிறது.

இடதுசாரிகள் ஆதரவு
ராமச்சந்திரன் (சிபிஐ): மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவிலேயே முதல் முதல்வர் நம்முடைய முதல்வர் ஸ்டாலின்தான் என்பதை நிரூபிக்கும் தீர்மானம் இது. இத்தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனதார வரவேற்கிறேன். வலதுசாரிகள், வெளிமாநிலத்தவர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர். மாநில ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாடு, மக்களாட்சி கோட்பாட்டுக்கு எதிரானது. நாகை மாலி (சிபிஎம்): இத்தீர்மானத்தை சி.பி.எம் கட்சி சார்பில் வரவேற்கிறேன்.

விசிக கோரிக்கை
சிந்தனைச்செல்வன் (விசிக): இத்திருத்த சட்டத்தை விடுதலை சிறுத்தைகள் சார்பாக வரவேற்கிறோம். அதேநேரத்தில் 2 கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கிறோம். கடந்த 4 ஆண்டுகளாக ஆளுநர் என்ற அடையாளத்துக்குப் பின்னால் இருந்து 2,000 ஆண்டுகால தமிழக கல்வி மரபின் மீது மத்திய அரசு மாபெரும் தாக்குதலை நடத்தி இருக்கிறது. ஆகையால் 4 ஆண்டுகளாக நியமிக்கப்பட்ட அனைத்து துணைவேந்தர்கள் குறித்து நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குடியிருக்கும் கிரீன்வேஸ் சாலை குடியிருப்புகளில் ஒன்றையே ஆளுநருக்கு தமிழக அரசு ஒதுக்க வேண்டும். ஊட்டியில் இருக்கிற ஆளுநர் மாளிகையை காலி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

பாமக, காங்கிரஸ்
ஜி.கே.மணி(பாமக): தமிழகத்தின் முதல்வர்தான் அனைத்து பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும். இணைவேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சர்தான் இருக்க வேண்டும். இந்த சட்ட முன்வடிவை பாமக 100 விழுக்காடு வரவேற்கிறது. காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகையும் இந்த மசோதாவை ஆதரித்து பேசினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. கார்டு விண்ணப்பித்தோருக்கு 30 நாளில் தமிழக அரசு குட் நியூஸ் -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
வன்னி அரசு வந்ததும் வராததுமா செய்த வேலை.. அரசு அதிகாரிகள் பங்கேற்ற தாட்கோ கூட்டத்தில் என்ன நடந்தது -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications