பவர் திருமாவளவனுக்கே.. விசிக வெளியேறினால் திமுக ஆட்சி அவ்ளோதான்.. சீட்டு எண்ணிக்கை இதுதான்: பிரபலம்
சென்னை: வருகிற மே 31-ம் தேதி திருச்சியில் விசிக சார்பில் மதச்சார்பின்மையை காப்போம் மக்கள் எழுச்சி பேரணி நடைபெறுகிறது. மதச்சார்பின்மைக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களை தடுக்கும் வகையிலும் வக்பு சட்ட திருத்த சட்டத்தை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் இந்தப் பேரணி நடைபெறுகிறது. இதுகுறித்து விசிக மாநில அணி செயலாளர் சங்கத்தமிழன் ஒன் இந்தியாவுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில், இம்மாநாடு குறித்து ஏராளமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நம்முடைய ஒன்இந்தியா வெப்சைட்டிற்கு, மூத்த பத்திரிகையாளர் மணி, சமீபத்தில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "பாமகவை கூட்டணியில் சேர்த்தால் விசிக நிச்சயம் வெளியேறும். அப்படிப்பட்ட நிலையை திமுக விசிகவுக்கு ஏற்படுத்தினால் அதை விட ஒரு அரசியல் அவலம் திமுகவுக்கு இருக்க முடியாது.

திமுக விசிகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிடுமானால் இப்போதே எழுதி வைத்துக் கொள்ளலாம், திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது. படுதோல்வியைத் தழுவும். எனவே விசிகவை ஸ்டாலின் இழக்கமாட்டார். திருமா வெளியே சென்றால் திமுகவுக்கு பேராபத்து. பச்சை நம்பிக்கை துரோகம்.. அந்த தவறை ஸ்டாலின் செய்ய மாட்டார் என்பதை உறுதியாக நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.
கூட்டணிக்கே பவர்
அதேபோல நேற்றைய தினமும் மூத்த பத்திரிகையாளர் மணி மீண்டும் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், திருமாவளவன் இருந்தால் திமுக கூட்டணிக்கே பவர்.. அதே திருமாவளவன் வெளியில் சென்றால் திமுக வெற்றி பெற வாய்ப்பில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விசிகவின் சங்கத்தமிழன் நம்முடைய "ஒன் இந்தியா"வுக்கு பிரத்யேகமாக அளித்துள்ள பேட்டியில், "தேர்தலில் சீட் பேரத்தை அதிகரிப்பதற்காகவே பாமக மாநாட்டை ராமதாஸ் கட்சியினர் நடத்துகிறார்கள்.. வன்னியர்களே ஒன்றுகூடுங்கள் என்று அழைப்பு விடுத்து நடத்துகிறார்கள்.
பறையர்களே ஒன்றுகூடுங்கள்
மதச்சார்பின்மையை காப்போம் மக்கள் எழுச்சி பேரணியை விசிக நடத்துகிறது.. அதற்காக நாங்கள், "பறையர்களே ஒன்றுகூடுங்கள், தலித்துகளே ஒன்றுகூடுங்கள், தமிழகத்தை கைப்பற்றுவோம்" என்றெல்லாம் சொல்லி மாநாட்டை நடத்தவில்லை. ஏற்கனவே தேசம் காப்போம் மாநாடு, தேசம் காப்போம் பேரணி, ஜனநாயகம் வெல்லும் என்றெல்லாம் பேரணி நடத்தியிருக்கிறோம்.
சாராயம் தராமல், குவார்ட்டர் தராமல், பிரியாணி தராமல், பணம் தராமல் நடத்தக்கூடிய பேரணி, மாநாடு என்றால் அது விசிகதான்.. இது அனைத்து கட்சியினருக்குமே தெரியும். இந்த மாநாடு, தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படுகிறதா? என்று கேட்கிறீர்கள்.. எங்கள் தலைவர் தேர்தலை மையமாக வைத்து எதையுமே நடத்தியதில்லை.. எங்கள் தலைவன் ஒரு களப்போராளி.. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் நாட்டில் கலவரம் நடக்கக்கூடாது என்பதே எங்கள் மாநாட்டின் நோக்கம்.
தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்
மாநாட்டுக்கு வரும் கூட்டத்தை காட்டித்தான் திமுகவிடம் சீட்டை நாங்கள் உயர்த்த வேண்டும் என்பது எங்களுக்கு கிடையாது., ஏற்கனவே திமுகவுக்கு எங்களுடைய வலிமை தெரியும்.. திமுகவின் வலிமை விசிகவுக்கு தெரியும்.. எங்கள் இருவரின் வலிமைதான் மக்களின் வலிமை. தேர்தலுக்காக தேர்தல் வேலையைதானே செய்ய வேண்டுமே தவிர, மாநாட்டையல்ல..
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.. இதை பற்றி யாருமே பேசவில்லை? ஆனால், நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்..
விசிக சீட் எண்ணிக்கை
திமுக கூட்டணியில் சீட் எண்ணிக்கை பற்றி கேட்கிறீர்கள்.. பத்திரிகையாளர் மணி தந்த பேட்டியில், "200 தொகுதியில் திமுக வெற்றி பெறும்.. ஆனால், விசிக கூட்டணியில் இருந்தால்தான் இது நடக்கும்.. திருமாவளவன் இருந்தால் கூட்டணிக்கே பவர்.. அதே திருமாவளவன் வெளியில் சென்றால் திமுக வெற்றி பெற வாய்ப்பில்லை என்கிறார்.
அதாவது எங்களுக்கு வெறும் சீட் கணக்குதான் நஷ்டம்.. ஆனால், திமுகவுக்கு ஆட்சியே நஷ்டம். பத்திரிகையாளர் மணிக்கு தெரிந்த விஷயம், தமிழகத்தை சமூக நீதி கோட்பாட்டில் ஆண்டுகொண்டிருக்கிற முதல்வருக்கு தெரியாமல் இருக்குமா? திமுகவுக்கு அடுத்தபடியாக வலிமையாக உள்ளது விசிகதான்.. எனவே, டபுள் டிஜிட்டுக்கு மேலதான் விசிகவின் சீட்டு இருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications