'சபலப் புத்தி' பெண்கள் என இழிவுபடுத்தும் மனுஸ்மிருதி- 1 லட்சம் பிரதி அச்சடித்து விநியோகம்: திருமாவளவன்
சென்னை: சபலப் புத்தி படைத்தவர்கள் என பெண்களை அடக்கி வைக்கும் மனுஸ்மிருதி நூலை 1 லட்சம் பிரதிகள் அச்சடித்து விநியோகம் செய்ய இருக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அறிவித்துள்ளார்.
இந்துத்துவ கோட்பாடுகளை வலியுறுத்தும் மனுஸ்மிருதி நூலில் ஆண்-பெண் வேறுபாடு; சக மனிதர்களிடையே வேறுபாடு என வர்ண, பாலின பேதக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன; ஆகையால் மனுஸ்மிருதிக்கு எதிராக 100 ஆண்டுகளாக திராவிடர் இயக்கம் போராடி வருகிறது. அம்பேத்கரும் மனுஸ்மிருதியை எரித்துப் போராட்டம் நடத்தினார்.

ஆ.ராசா சர்ச்சை பேச்சு
சென்னையில் அண்மையில் மூத்த திமுக தலைவர் ஆ.ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் மனுஸ்மிருதியில் இடம்பெற்றுள்ளவை குறித்து பேசியது பெரும் பிரளயமாக வெடித்தது. ஆ.ராசா தமது பேச்சில், நீ பார்சியாக இல்லையெனில், கிறிஸ்தவனாக இல்லையெனில், இஸ்லாமியராக இல்லையெனில், நீ ஒரு இந்துவாகத்தான் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்;இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என கூறியிருந்தார்.

பாஜகவும் கோர்ட்டும்
ஆனால் இந்தப் பேச்சை தமிழக பாஜகவின் திசை திருப்பி பிரசாரம் செய்தனர். அதாவது தமிழகப் பெண்களை ஆ.ராசா விபச்சாரிகள் என விமர்சித்துவிட்டார் என சொன்னது பாஜக. அத்துடன் ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தியது பாஜக. இது தொடர்பாக வழக்குப் போட்டு பாருங்கள் என சவாலும் விடுத்தார் ஆ.ராசா. அதனடிப்படையில் போடப்பட்ட வழக்கும் கூட சென்னை உயர்நீதிமன்றத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

மனுஸ்மிருதியும் விசிகவும்
இந்தப் பிரச்சனை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நவம்பர் 6ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மனுஸ்மிருதிகளை அச்சிட்டு மக்களுக்கு வினியோகம் செய்ய இருக்கிறோம் என அறிவித்துள்ளார். அத்துடன் மனுஸ்மிருதியில் பெண்கள் பற்றி என்ன சொல்லி இருக்கிறது எனவும் ஒரு நிகழ்ச்சியில் திருமாவளவன் விவரித்தார்.

பெண்களை இழிவுபடுத்தும் மனுஸ்மிருதி
இது தொடர்பாக திருமாவளவன் கூறுகையில், மனுஸ்மிருதியை நமது பெண்கள் படிக்க வேண்டும். பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் காரணமான உளவியலுக்கு அடிப்படை மனுஸ்மிருதி. பெண்களை சபலப் புத்தி கொண்டவர்கள் என்கிறது மனுஸ்மிருதி. அதனால் ஆண், கணவர் கண்காணிப்பில் பெண் இருக்க வேண்டும் என்கிறது. பிராமணர் பெண் உள்ளிட்ட அனைத்து சமூகப் பெண்களையும் இப்படித்தான் குறிப்பிடுகிறது மனுஸ்மிருதி. அதன் உண்மை முகத்தை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக 1 லட்சம் பிரதிதிகள் வழங்குகிறோம் என்றார். புதியதாய் என்ன பிரளயம் உருவாகுமோ?
-
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
தவெகவுக்கு தாவிய.. அதிமுக எம்எல்ஏக்களின் செயல் அர்த்தமற்றது! - கொந்தளித்த விசிகவின் பாலாஜி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications