சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கைய புடிச்சி இழுத்தேனா".. தங்கச்சின்னு சொல்லிட்டே.. சீமானின் கேவலமான சிரிப்பு.. பொளந்து கட்டிய விசிக

ஜோதிமணிக்கு விசிகவின் வன்னியரசு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை, நாம் தமிழர் கட்சி சீமான் தரக்குறைவாக பேசியதாக விசிக குற்றஞ்சாட்டி, விமர்சித்துள்ளது..
ராஜீவ் காந்தி நினைவு தினமான 21-ம் தேதி, ராஜீவ் காந்தி குறித்து சீமான் சொன்ன கருத்து பெருத்த அதிர்ச்சியை அரசியல் களத்தில் ஏற்படுத்தியது.

Recommended Video

    Seeman VS Jothimani | சீமான் ஒரு பாலியல் குற்றவாளி - ஜோதிமணி | #PressMeet | Oneindia Tamil

    இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது.. குறிப்பாக, கரூர் எம்பி ஜோதிமணி பதிலடி தந்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

    ஜோதிமணியை இதற்கா ஜெயிக்க வைத்தோம்? சீறும் உடன்பிறப்புகள்..! நடந்தது என்ன?ஜோதிமணியை இதற்கா ஜெயிக்க வைத்தோம்? சீறும் உடன்பிறப்புகள்..! நடந்தது என்ன?

    சீமான்

    சீமான்

    அதில், "சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர், தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயகன், தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது" என்று விமர்சித்திருந்தார்.

    ஜோதிமணி

    ஜோதிமணி

    ஜோதிமணியின் இந்த கருத்து குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு சீமான், "உன்னை கையை பிடிச்சி இழுத்தேனா.. நான் உன்ன என்ன செய்தேன்? நான் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதை அவர் பக்கத்தில் இருந்து பார்த்தாரா? அவரை தங்கச்சி என்பதைத்தவிர மறுவார்த்தை ஏதாவது இதுவரைக்கும் பேசியிருக்கேனே? நான் எடுத்து வைக்கும் அரசியல் குறித்து சரியான பெண் மகளாக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினராக பதில் சொல்லணும்'' என்று காட்டமாக கூறியிருந்தார்.

     விஜயலட்சுமி

    விஜயலட்சுமி

    சீமான் பேசியதை கேட்டு மேலும் கொந்தளித்து போனார் ஜோதிமணி.. செய்தியாளர்களிடம் பேசும்போதும் "முன்னாள் பிரதமர் என்று பாராமல் ராஜீவ் காந்தியை, சீமான் பேசியதற்கு பதில்தான் சொன்னேன்.. ஆனால், விஜயலட்சுமி ஆதாரத்தோடு சீமான் மீது புகார் கூறியிருந்தார். அதையே நான் சொன்னேன்.. ஆனால், தனிப்பட்ட முறையில் என்னை தாக்கும் நோக்கத்தோடு சீமான் பேசுகிறார்... அவர் மட்டும் நேர்மையானவராக இருந்தால், கோர்ட்டுக்கு போய் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கலாம்.

     ஆபாச தாக்குதல்

    ஆபாச தாக்குதல்

    பெண்கள் மீது ஆபாச தாக்குதல், அவதூறு பரப்பினால் என்னை போன்ற பெண்களை அரசியலை விட்டு விரட்டலாம் என்று சீமான் போன்றவர்கள் நினைக்கிறார்கள். இந்த மாதிரியான தாக்குதல்கள் எனக்கு புதிதல்ல பாரதிய ஜனதா கட்சியிலும் எனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தாக்குதல்கள் நடந்து வருகிறது. சீமான் பாஜகவின் B டீம்" என்றார்..

     ஆபாசம்

    ஆபாசம்

    மேலும், கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்ததாக பேசிய சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். கருத்து முரண்பாடு காரணமாக நாம் தமிழர் கட்சியில் உள்ள உறுப்பினர்கள், சீமான் போன்ற ஆபாச வக்கிர அரசியல்வாதிகளை பின்பற்றி, தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது. எனவே, சீமான் போன்ற நபர்களை தொடர்ந்து தோலுரிக்கும் பணியை செய்வோம்" என்றார்.. இந்நிலையில், ஜோதிமணியை சீமான் இழிவாக பேசியதற்காக, காங்கிரஸ் கட்சி கண்டனத்தை தெரிவித்துள்ளது.

     கண்டன ஆர்ப்பாட்டம்

    கண்டன ஆர்ப்பாட்டம்

    முன்னாள் பிரதமர் ராஜீவ் மற்றும் எம்பி ஜோதிமணி குறித்து தரக்குறைவாக விமர்சித்த சீமானை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினனர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.. சீமான் உருவ பொம்மையையும் எரித்தனர்.. "பாலியல் குற்றவாளி, அரசியல் வியாபாரி, தீவிரவாதிகளை ஆதரிக்கும் இனத்துரோகி" என்று சீமானை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.. மேலும், சீமானின் உருவப்படத்தை துடைப்பம், காலணிகளால் அடித்தும், சீமானின் உருவ பேனரைக் கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     வன்னயரசு

    வன்னயரசு

    இப்போது காங்கிரஸை அடுத்து, விசிகவும் ஜோதிமணிக்கு ஆதரவ தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு பதிவிட்டுள்ள ட்வீட்டில், "பொதுவாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பெண்ணை, அதுவும் நாடாளுமன்ற உறுப்பினராக களமாடும் தோழர் ஜோதிமணி அவர்களை இழிவுபடுத்தி பேசுவது சரியா?அதுவும் தங்கச்சி என சொல்லிக்கொண்டே,"உன்ன கைய புடிச்சு இழுத்தேனா?" என கேவலமாக சிரிப்பது ஆணாதிக்கமா? ஆற்றாமையின் வெளிப்பாடா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த ட்வீட்டை சீமானுக்கும் டேக் செய்துள்ளார் வன்னியரசு.

    விஜயலட்சுமி

    விஜயலட்சுமி

    இதற்கு பலரும் திரண்டு வந்து ஆதரவு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் சிலர், பொது வாழ்க்கையில் இருந்தவர்தான் செல்வி.ஜெயலலிதா.. அவருடைய மோடி பிரதமர் மோடி சந்திப்பை, காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் அன்று கொச்சைப்படுத்தியபோது ஏன் அமைதி காத்தீர்கள்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.. இன்னும் சிலரோ, ஆணாதிக்கம் என்று சொல்லி ஆண்களை கொச்சை படுத்த வேண்டாம், சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு குடுத்தும் இரு அரசுகளும் ஏன் வழக்கு கூட பதியவில்லை? கூட்டணியில் இருக்கும் நிலையில் நீங்கள் இதைப்பற்றி ஏன் அரசுக்கு அழுத்தம் தரக்கூடாது? என்று வன்னியரசுவிடமே கேள்வி கேட்டு வருகிறார்கள்.

    English summary
    vck vanni aras slams naam tamilar party seeman and youth Congress struggle against him ஜோதிமணிக்கு விசிகவின் வன்னியரசு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X