பா.ரஞ்சித் அரசியல் என்ன மாதிரின்னு தெரியல.. விசிக மதவாதத்தின் எதிரி - வன்னியரசின் மாமன்னன் டீகோட்
சென்னை: பா.ரஞ்சித்தின் அரசியல் என்ன மாதிரியானது என்று தனக்கு தெரியவில்லை என்றும், விடுதலை சிறுத்தைகள் சனாதானத்திற்கு எதிராக அரசியல் செய்வதாகவும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
மாமன்னன் திரைப்படம் மற்றும் அது குறித்த இயக்குநர் பா.ரஞ்சித்தின் கருத்துக்கள் குறித்து ஒன் இந்தியா தமிழ் நேர்காணலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, "விசிக தனித்துவமான தனித்த அடையாளத்தை பாதுகாக்க, அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கவே இப்படியொரு கட்சியை தொடங்கி கால் நூற்றாண்டுக்கும் மேலாக களமாடுகிறோம். சமூக தளத்தில் இருக்கும் பாகுபாடு அரசியல் தளத்திலும் இருக்கிறது. ஆரம்பத்தில் எங்கள் தலைவர் தலித்கள் என்றால் போஸ்டர் ஒட்டதான் இருக்க வேண்டுமா? பதவிகளில் இருக்கக்கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அது திமுக, அதிமுகவுக்கு மட்டும் பொறுந்தாது. தேசிய கட்சிகளும் பொறுந்தும். சமூக களத்தில் இருப்பதுதான் அரசியல் களத்திலும் உள்ளன. ஆனால், அக்கட்சியின் கொள்கையை ஏற்றவர்கள் அதன் அடிப்படையில் நடக்கிறார்களா, நடத்துகிறார்களா என்று பார்க்கிறோம். அதைதான் மாமன்னன் படத்தில் காட்டுகிறார்கள்.
மாவட்டங்கள் கீழ் மட்டங்களில் ஜாதி பாகுபாடு உள்ளதை மறுக்க முடியாது. தனித்தொகுதிகளில் தலித்துகள் போட்டியிட்டு வெல்வது தலித்துகளுக்காக மட்டும் குரல் கொடுக்க இல்லை. அங்கு எல்லா மக்களும்தான் உள்ளார்கள். போட்டியிட்டு வெல்வதற்கான வாய்ப்புதான் தனித்தொகுதி.
நலத்திட்ட உதவியில் எல்லா மக்களும்தான் வருகிறார்கள். அவ்வாறு பார்ப்பதே பார்வை கோளாறுதான். அது சமூக நீதி பார்வையல்ல. பொதுத்தொகுதியில் நிற்பவர்கள் தலித் அல்லாதவருக்கான பிரதிநிதி என்று சொல்ல முடியுமா? தனித்தொகுதியில் போட்டியிடுபவர் அந்த மக்களுடைய பிரச்சனையை கூடுதலாக கவனிக்க வேண்டும்.
அவர் பொதுத்தொகுதியில் நடக்கும் பிரச்சனை பற்றியும் பேசலாம். அவரை தலித்தாக சுறுக்குவது சரியல்ல. பாதிக்கப்படுபவர் தலித்தா என்று பார்த்து செய்வது சமூக நீதியல்ல. ஆதிதிராவிடர்களாக ஒன்றினைவோம் என்று விசிக ஒரு சாதியினரை மட்டும் சொல்லவில்லை. அதில் உள்ள 74 சாதிகளையும் அடையாளப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
அவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார அமைப்புகள் இந்த சமூகத்தை வேறுபடுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது. மதவாத அமைப்புகளிடம் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை இருப்பதால் அவர்களை ஒன்றுதிரண்ட வேண்டிய தேவையுள்ளது. வட மாநிலங்களில் அவர்களை தனித்தனியாக பிரிக்கிறார்கள்.
இந்துக்களை சாதி ரீதியாக பிரிப்பதைபோல் பாஜக தலித்துகளையும் சாதி ரீதியாக பிரிக்கிறது. இவ்வாறு ஒன்று திரட்டுவது தேர்தலோடு ஒப்பிட்டு பார்க்க முடியாது. தலித்துகள் தனிமைப்படுத்தப்படாமல் பொது நீரோட்டத்தில் இணைவதே விசிகவின் அரசியல். தலித் அல்லாதவர்களையும், முற்போக்குவாதிகளையும் இணைத்துதான் போராட்டக் களத்தில் நிற்கிறோம்.
இளவரசன் படுகொலைக்கு எதிரான போராட்டத்தின்போதும் அனைவரையும் விசிக இணைத்தது. பா.ரஞ்சித்தின் அரசியல் என்ன மாதிரியானது என்று தெரியவில்லை. வட மாவட்டங்களில் வன்னியர்கள் பன்றி வளர்க்கிறார்கள். தென் மாவட்டங்கள் குறவர்கள், பள்ளர்கள் வளர்க்கிறார்கள். சென்னைகள் பன்றி பன்னை உள்ளது.
இது ஒரு தொழிலாக மட்டுமின்றி வீட்டிலும் வளர்க்கிறார்கள். இதுவரை எந்த திரைப்படத்திலும் பன்றி வளர்ப்பதை தொழிலாக காட்டியதில்லை. மாமன்னன் படத்தில்தான் காட்டுகிறார்கள். அது அடையாளத்தை காட்டுவதற்காகதான். இழிவுபடுத்துவதைபோல் எந்த இடத்திலும் அது இல்லைதானே.
மாட்டுக்கறி தின்றால் இழிவாக பார்க்கிறார்கள், மாட்டை புனிதமாக பார்க்கிறார்கள். பிராமணர்களை மாட்டுக்கறி வாங்குகிறார்கள். பல கோடிக்கணக்கில் கொள்ளையடித்த நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்றோர் பெரும் தொழிலதிபர்களாக காட்டப்படும்போது உழைக்கும் மக்களின் தொழில் இழிவாக ஏன் பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் மாரி செல்வராஜ் அவருக்கான தளத்தை காட்டுகிறார்." என்றார்.












Click it and Unblock the Notifications