ஆளுநரே வேணாம்.. முதலமைச்சர் கையில் பவர்! 432 மூலம் முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க வன்னியரசு யோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுவிக்கப்படாத மீதமுள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை முதலமைச்சர் ஆளுநரின் பரிந்துரை இல்லாமல் நேரடியாக விடுதலை செய்ய சட்டத்தில் இடம் உண்டு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலையும் மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோளும். பேரறிஞர்_அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வது தமிழ்நாடு அரசின் வழக்கம். தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மரண தண்டனை குற்றவாளிகளாக இருந்து ஆயுள் சிறைவாசிகளான நெடுஞ்செழியன், முனியப்பன்,ரவீந்திரன் போன்ற கொடுங் குற்றவாளிகளை அதிமுக அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு விடுதலை செய்தது. அன்றைய ஆளுனர் பன்வாரிலால் முதலில் மறுத்து கடிதம் அனுப்பினார். பின்னர் விடுவித்தார்.

VCK Vanniarasu said Chief Minister release Muslim prisoners without the recommendation of Governor

அதே போல மேலவளவு கிராமத்தில் பேரூந்தை வழிமறித்து 7 தலித்களை துடிக்க துடிக்க படுகொலை செய்த சாதிவெறி பயங்கரவாதிகள் 13 பேரை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக அரசால் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், கோவை சிறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியிலும் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக அரசு ஈடுபடவில்லை என்பது வேதனைக்குரிய சம்பவமாகும்.

மேலவளவு சாதிவெறிக்கும்பலை, தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மாணவிகளை படுகொலை செய்த அதிமுக கொலைக்கும்பலை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்த எடப்பாடியார், முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆளுநருக்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை. இச்சூழலில், திமுக தலைமையிலான தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் அவர்கள் முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆளுநர் ரவி அவர்களுக்கு பரிந்துரைத்தார். ஆனால், சனாதனப் பேர்வழியான ரவி முஸ்லீம் என்றவுடன் திருப்பி அனுப்பினார்.

ஆனாலும் தமிழ்நாடு முதல்வர் முஸ்லீம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 பேரை விடுதலை செய்ய பரிந்துரைத்தார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இப்போது 16 சிறைவாசிகளும் மற்ற வழக்குகளில் 20 முஸ்லீம் சிறைவாசிகளும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சொல்ல முடியாத துயரத்தில் வாடுகின்றனர். இவர்களை விடுவிக்கவே தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது. இரு நாட்களுக்கு முன் ஆளுனர் 12 பேருக்கான விடுதலையை உறுதிப்படுத்தி கையெழுத்திட்டு உள்ளார்.

அந்த வகையில், கடந்த 33 ஆண்டுகளாக சிறையிலிருந்த அபுதாஹிர், ஊம் பாபு, ஹாரூன் பாஷா, குண்டு ஜாஹிர், சாகுல் அமீது ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கோவை குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்டதாக சொல்லி சிறைப்படுத்தப்பட்டுள்ள மீதமுள்ள 10 பேரையும், கோவை குண்டு வெடிப்பில் சம்மந்தமில்லாத வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டுள்ள 20 பேரையும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை, சட்டப்பிரிவு 161 அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஆளுனருக்கு பரிந்துரை செய்து காத்திருக்கிறது.

ஆனால், ஆளுனரோ முஸ்லீம் சிறைவாசிகளை விடுவிக்க காலம் தாழ்த்துகிறார். ஆகவே, குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 432 ன் படி சிறைவாசிகளை தமிழ்நாடு முதல்வர் அவர்களே விடுதலை செய்ய சிறப்பு அதிகாரமுண்டு. ஆகவே, தமிழ்நாடு முதல்வர் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மீதமுள்ள முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோருகிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+