இஸ்லாமிய இன அழிப்புக்கும் முஸ்லீம்கள்தான் காரணம்னு "ஓம் தமிழர்" சீமான் சொல்வார் போல: வன்னியரசு
சென்னை: ஹரியானா அரசு இஸ்லாமிய இன அழிப்பில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, சீமான் இதுபற்றி என்ன சொல்லப்போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "ஹரியானா மாநிலத்தில் நூஹ் மாவட்டத்தில் சமீபத்தில் பஜ்ரங் தள் நடத்திய பேரணியில் இஸ்லாமிய குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலில் இஸ்லாமியர்களின் வீடு, கடை, வணிக வளாகங்கள் என அனைத்தும் பஜ்ரங் தள் வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டன.

ஹரியானா பாஜக அரசின் காவல்துறை முன்னிலேயே வன்முறை அரங்கேறியது. கலவரக்காரர்களிடமிருந்து தங்கள் உடைமைகளை பாதுகாக்க போராடியவர்கள் மீதும், தாக்குதலில் பாதிப்புக்குள்ளான இஸ்லாமியர்கள் மீதும் தற்போது அரச பயங்கரவாதம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நூஹ் நகரில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்த இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளை சட்டவிரோத ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி வருகிறது பாஜக அரசு. புல்டோசர் நடவடிக்கை என்பது சிகிச்சை நடவடிக்கையின் ஒரு பகுதி என்று கருத்து சொன்னார் ஹரியானா மாநில உள்துறை அமைச்சர் அணில் விஜ்.
இந்த நிலையில் ஹரியானா பாஜக அரசின் சட்டவிரோத புல்டோசர் நடவடிக்கை குறித்து செய்தித்தாள் செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை எடுத்தது பஞ்சாப் - ஹரியானா மாநில உயர்நீதிமன்றம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்தாவாலியா மற்றும் ஹர்பிரீத் கௌர் ஜீவன் அமர்வு ஹரியானா பாஜக அரசு குறித்து கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
சட்டம் - ஒழுங்கு என்ற பெயரில் எந்தவித சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இடிப்பு நடவடிக்கையை மாநில அரசு எடுத்து வருவதாக செய்தித்தாள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், குறிப்பிட்ட சமூகத்தினரின் கட்டடங்கள் மட்டுமே இடிக்கப்படுகிறதா என்பதும், மாநில அரசால் இனவழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா?
என்பதும் இந்த சம்பவத்தில் பார்க்க வேண்டியுள்ளது என்று மிகக் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ள நீதிமன்ற அமர்வு.
சட்டவிரோத புல்டோசர் நடவடிக்கைக்கு உடனடி தடை விதித்தும்,
வரும் 11 ஆம் தேதி மாநில அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. ஹரியானா அமைச்சர் அணில் விஜ் தெரிவித்த கருத்து செய்தித்தாளில் வந்துள்ளதாகவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஒருபுறம் மணிப்பூரில் கிறிஸ்தவ பழங்குடிகளின் இனவழிப்பு அரங்கேறி வரும் நிலையில் ஒன்றிய - மாநில இரட்டை என்ஜின் பாஜக அரசை நம்பாமல், மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி இல்லை என்று கருத்து தெரிவித்தது உச்சநீதிமன்றம்.
மேலும், தனியே நிவாரண பணிகளை மேற்பார்வை செய்ய முன்னாள் பெண் நீதிபதிகளை கொண்ட குழுவை அமைத்துள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட். இப்போது ஹரியானா மாநில பாஜக அரசு இஸ்லாமிய இனவழிப்பில் ஈடுபட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது உயர்நீதிமன்றம்.
தாமதமாகவேணும் நீதிமன்றங்கள் விழித்துக் கொண்டு மக்களை பாதுகாக்க களத்தில் இறங்கி இருப்பது நம்பிக்கையை தந்துள்ளது. நமக்கிருக்கும் கவலை என்னவென்றால் சனாதன கும்பல் நாடு முழுவதும் அரங்கேற்றி வரும் இஸ்லாமிய இனவழிப்புக்கும் இஸ்லாமியர்கள் தான் காரணம் என்று ஓம் தமிழர் சீமான் பேச போகிறாரா? என்பது தான்.
தங்கள் சித்தாந்த தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் குறித்து கேள்வி எழுப்பினால் சீமானுக்கு கோபம் வருவது நியாயம் தானே?
ஓம் தமிழர் கும்பலிடமிருந்து விரைவில் ஜெய்ஶ்ரீராம் முழக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications