Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாமகவின் கலவரத்தை ஜெயலலிதா அம்பலப்படுத்தினார்.. மேல்முறையீடு செய்யுங்க! - வன்னியரசு வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தலித்துகளின் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்பட்ட வழக்கில் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னியரசு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கத்தின் இளைஞர் பெருவிழா நடைபெற்றது.

இதில் தமிழகம் எங்கிலிருந்தும் இருந்து ஏராளமான வன்னியர்கள், பாமக தொண்டர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

வேன்களில் சென்று கலவரம்

வேன்களில் சென்று கலவரம்

இவர்களில் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கும் மரக்காணத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது.

வாகனங்கள், குடிசைகள் தீக்கிரை

வாகனங்கள், குடிசைகள் தீக்கிரை

இருதரப்புக்கும் இடையே வெடித்த தகராறு கலவரமாக உருவெடுக்க அவ்வழியாக வந்த பேருந்துகள் அடித்து உடைக்கப்பட்டன. பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அவ்வழியாக இருந்த தலித் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. திண்டிவனம் கூடுதல் மாவட்ட 2 வது அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது.

பாமகவினர் விடுதலை

பாமகவினர் விடுதலை

இதில் குற்றம்சாட்டப்பட்ட 20 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. அதில், அரசு தரப்பில் போதிய சாட்சிகள் சமர்பிக்கப்படாததால் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று வரவேற்பு தெரிவித்தார்.

வரவேற்ற ராமதாஸ்

வரவேற்ற ராமதாஸ்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மரக்காணம் கலவரம் தொடர்பாக புனையப்பட்ட பொய் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட அனைத்து பாமகவினரையும் திண்டிவனம் நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கலவரம் என்பது பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும். இதில் பாமகவின் அப்பாவி தொண்டர்கள் இருவர் கொல்லப்பட்டனர். ஆனால் திட்டமிட்டு பாமகவினர் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டன. இதன்மூலம் நீதி வென்றுள்ளது." என குறிப்பிட்டு இருந்தார்.

வன்னியரசு கருத்து

வன்னியரசு கருத்து

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு, "கடந்த 23.4 2013 அன்று மாமல்லபுரத்தில், வன்னியர் சங்க மாநாட்டில் பங்கேற்ற பாமக கும்பலால் தலித் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்பட்டன. கால்நடைகள் அந்த தீயில் வெந்து மடிந்தன. இந்த வழக்கில் தொடர்புடைய சமூகவிரோதிகளை திண்டிவனம் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என கூறி விடுதலை செய்துள்ளது.

ஜெயலலிதா அம்பலப்படுத்தினார்

ஜெயலலிதா அம்பலப்படுத்தினார்

சட்டப்பேரவையில் கடந்த 30.4.2013 அன்று பாமக கும்பல் செய்த வன்முறை வெறியாட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அம்பலப்படுத்தி விளக்கினார். அப்படி இருக்கும் போது இந்த வழக்கில் சரிவர சாட்சியங்கள் இல்லை என நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது பாதிக்கப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். ஆகவே, தமிழ்நாடு அரசு தலித்களுக்கு நீதி பெற்றுத்தரும் வகையில், மேல் முறையீடு செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்." எனக்குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+