அண்ணா! டவர் ஏறி பாக்சிங் போடலாமா? சவால் விட்ட வீரலட்சுமி கணவர்..'சாவுதான்'- தெறி பதில் சொன்ன சீமான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியின் கணவர் போனில் மிரட்டியதாக கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் அடுத்த திருப்பமாக சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையேயான மோதல் வெடித்துள்ளது. என் வாழ்க்கையில் வீரலட்சுமிக்கு எல்லாம் மன்னிப்பே இல்லை என்கிறார் சீமான். மன்னிப்பா! அதெல்லாம் கேட்கவே முடியாது என்கிறார் வீரலட்சுமி.

Veeralakshmi Husband threatens Naam Tamilar Chief Seeman

வீரலட்சுமியும் விஜயலட்சுமியும்: சீமானுக்கு எதிராக புகார் கொடுத்த நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக நின்றார் வீரலட்சுமி. அத்துடன் நடிகை விஜயலட்சுமியை பண்ணை வீடு ஒன்றில் தங்க வைத்தார். ஆனால் அந்த பண்ணை வீட்டில் தன்னை அடைத்து வைத்து வீரலட்சுமி சகோதரிகள் சித்ரவதை செய்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனிடம் போனில் கதறினார் விஜயலட்சுமி. சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடப்பதாக விஜயலட்சுமி கூறியதால் வழக்கறிஞர் ஒருவர் மூலமாக அவர் மீட்கப்பட்டு புகார் வாபஸ் பெறப்பட்டு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வீரலட்சுமி கணவர் மிரட்டல்: இந்த பஞ்சாயத்தில் வீரலட்சுமி பேசிய பேச்சுகளுக்கு சீமான் தரப்பு இடைவிடாமல் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. வீரலட்சுமியின் ஜாதியை வைத்தும் பஞ்சாயத்து ஓடுகிறது. இந்த நிலையில் வீரலட்சுமியின் கணவர் கணேசன், சீமானை வம்பிழுத்ததாக ஒரு ஆடியோ சமூக வலைதளதங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோ தொடர்பாக வீரலட்சுமி தரப்பில் எந்த கருத்தும் இதுவரை சொல்லப்படவில்லை.

ஆடியோவில் இருப்பது என்ன?: சீமானிடம் பேசும் நபர், அண்ணே! நீங்க நல்லா இருக்கீங்களாண்ணே? என்கிறார் அதற்கு சீமான், ஏங்க நீங்க யாருன்னு சொல்ல மாட்டீங்களா? நான் நல்லா இருக்கேனா இல்லையான்னு கேட்டுகிட்டு கடுப்படிக்கிறார். ஆனாலும் "அண்ணே நம்ம ரெண்டு பேரும் பாக்சிங் பண்ணலாமா? டவர் ஏறி? ரிங் ஏறி.. ரிங் ஏறி.. உங்க கூட பாக்சிங் பண்ணனும்னு ஆசையா இருக்குண்ணே என்கிறார் போனில் பேசிய நபர். அத்துடன் அண்ணே..அண்ணே.. என அழைத்த போதும் சீமான், நீங்க யாருன்னு சொல்லிட்டு பேசுங்க என்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Veeralakshmi Husband threatens Naam Tamilar Chief Seeman

சாவுதான்... பதிலடி தந்த சீமான்: சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் இன்று செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்போது, வீரலட்சுமியின் கணவர் உங்களை போனில் மிரட்டியதாக சொல்லப்படுவது குறித்து என சீமானிடம் கேள்வி கெஎட்கப்பட்டது. இதற்கு சீமான் அளித்த பதில்: அது பேசக் கூடாதுன்னு நீதிபதி சொல்லி இருக்காங்க.. பாக்சிங் அது சரிதான்.. அவரு பகல் நேரத்துல பேசுனா நாம பாக்சிங் போகலாம்.. 7 மணிக்கு மேல பேசுறாரு.. அவரு பாக்சிங்கிக்கு கூப்பிடுறாரு.. நான் பேசி அவர் பதிவு பண்றாருன்னு தெரியுது. நாம எதையாவது பேசி அவர் பதிவு பண்ணி இந்த மாதிரி கேள்வி வரும்னுதான் செல்போனை கட் செய்தேன். அவர் எங்க கையாலதான் சாகனும்னு முடிவெடுத்துட்டாருன்னா சந்தோஷமாக எதிர்கொள்கிறேன்.. கேட்டு சொல்லுங்க.. இடம், நேரம் எல்லாம் நீங்க சொல்வீங்களாம்.. எப்ப வேணும்னாலும் அவரு வருவாருன்னு சொல்லிடுங்க நீங்க வாங்க அவரோட சண்டை போட்டு ஜெயிச்சிடுங்கன்னு சொல்லுங்க.. அவர் கிட்ட நேரில் முதலில் ஒருமுறை வந்து நில்லு.. அப்புறம் சண்டை போடலாம்னு சொல்லுங்க.. கேட்கும்போது சிரிப்பா இருக்குல்ல.. மகிழ்ச்சியாக இருங்க.. இவ்வாறு சீமான் பதிலளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+