சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா ஹாட்ஸ்பாட் மையங்களாகும் காய்கறி சந்தைகள்.. தொடர்ந்து மூடப்படும் கடைகள்.. மக்கள் கவலை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள காய்கறி சந்தைகளில் கொரோனா அதிகம் பரவுவதும் கடைகள் மூடப்படுவதும் மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் 364 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

இதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,117ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளது சென்னையில்தான். தமிழகத்தில் ஆரம்பத்தில் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வந்தவர்களால் கொரோனா பரவியதாக சொல்லப்பட்டது.

கேரளாவில் 52 கிலோ எடையுள்ள பலாப்பழம்... கின்னஸ் புத்தக்கத்தில் இடம்பெற நடவடிக்கைகேரளாவில் 52 கிலோ எடையுள்ள பலாப்பழம்... கின்னஸ் புத்தக்கத்தில் இடம்பெற நடவடிக்கை

சோதனை

சோதனை

இதைத் தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு திருமழிசைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் திருவான்மியூர் காய்கறி சந்தையிலும் வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அங்கிருந்த மற்றவர்களுக்கும் சோதனை நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியது தெரியவந்தது.

எம்ஜிஆர் நகர்

எம்ஜிஆர் நகர்

இதையடுத்து சென்னை எம்ஜிஆர் நகர் காய்கறி சந்தையிலும் வியாபாரிகள் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் சக வியாபாரிகள் சுமார் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டனர். அவர்களது உறவினர்களுக்கும் அங்கு காய்கறி வாங்கியவர்களுக்கும் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொத்தவால்சாவடி

கொத்தவால்சாவடி

2 வியாபாரிகளுக்கும் கொரோனா எப்படி பரவியது என தெரியவில்லை. இதையடுத்து எம்ஜிஆர் மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. இது மக்களை அச்சமடைய வைத்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதிலுமுள்ள காய்கறி சந்தைகளில் சோதனை நடத்துவது அவசியமாகிவிட்டது. அது போல் சென்னை பிராட்வேயில் உள்ள கொத்தவால்சாவடி மார்க்கெட் பகுதி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இயங்காது என வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

வியாபாரிகள்

வியாபாரிகள்

இது போல் காய்கறி சந்தைகள் எல்லாம் கொரோனா பரப்பும் ஹாட்ஸ்பாட்டுகளாக மாறியுள்ளது தமிழக மக்கள் வேதனையை தந்துள்ளது. இந்த மார்க்கெட்டுகளிலிருந்து காய்களை வாங்கி வந்து சாலைகளில் விற்பனை செய்யும் அனைத்து வியாபாரிகளுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

English summary
Vegetable markets are becoming Corona Hotspot zones in Tamilnadu. People demands that Street vegetable vendors are to be tested for corona.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X