சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கடும் உயர்வு - தக்காளி ஒரு கிலோ ரூ. 90க்கு விற்பனை

சென்னை கோயம்பேட்டில் தக்காளி ஒரு கிலோ 90 ரூபாயாக உள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: வரத்து குறைவு மற்றும் மழை காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 90 ரூபாயாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 550 வாகனங்களில், சுமார் 5,000 டன் காய்கறிகள் வருகின்றன. நேற்று காலை 480 வாகனங்களில் 4,500 டன் காய்கறிகள் வந்தன. இதன் காரணமாக, பீன்ஸ், தக்காளி, கேரட், கத்திரி, கோஸ் ஆகியவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Vegetable prices rise sharply in Chennai Koyambedu market 1kg Rs 90

நேற்று முன்தினம் ஒரு கிலோ பெங்களூர் தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு கிலோ நாட்டு தக்காளி 50 ரூபாயில் இருந்து 60 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இன்றைய தினம் தக்காளி ஒரு கிலோ 90 ரூபாயாக உள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் மொத்த விற்பனை கடைகளில் ஒருகிலோ தக்காளி எட்டு ரூபாய்க்கும்,சில்லரை கடைகளில் பத்து ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது வெளி மாவட்டங்களில் பெய்த திடீர் மழை காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்தது அதன் காரணமாக தக்காளியின் விலை அதிகரித்து உள்ளது.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தற்போது மழை பெய்து வருவதால் காய்கறிகள் வரத்து குறைவாக உள்ளது. இதனால் கோயம்பேடு மார்கெட்டில் தக்காளி, கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், குடைமிளகாய் உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன.

தற்போது, 480 வாகனங்களில் 4,500 டன் காய்கறிகள் மட்டுமே வருகிறது. வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 90 ரூபாயாக அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளை கவலையடையச் செய்துள்ளது.
ஹோட்டல் உரிமையாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பரவியதா தக்காளி காய்ச்சல்? உண்மை நிலவரம் என்ன? ராதாகிருஷ்ணன் கூறிய முக்கிய தகவல்..!தமிழகத்தில் பரவியதா தக்காளி காய்ச்சல்? உண்மை நிலவரம் என்ன? ராதாகிருஷ்ணன் கூறிய முக்கிய தகவல்..!

English summary
Vegetable prices in Chennai have skyrocketed due to low supply and rains. Housewives are worried as a kilo of tomatoes has gone up to 90 rupees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X