செஞ்சுரி அடித்த கத்தரி.. முருங்கை பக்கம் மட்டும் போயிடாதீங்க சார்! கோயம்பேட்டில் காய்கறி விலை ’டாப்’
சென்னை: தொடர் கனமழை மற்றும் விரத காலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கோயம்பேடு காய்கறி சந்தையில் கத்தரிக்காய் விலை 100 ரூபாயை எட்டி உள்ளது. அதிர்ச்சி தரும் விதமாக முருங்கைக் காய் விலை 280 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், ஒரு முருங்கைக்காயே 25 ரூபாய் வரை உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகள் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் ஈரப்பதம் காரணமாக வெங்காயம் தக்காளி ஆகியவற்றின் விலை கணிசமாக அதிகரிக்கும்.

குறிப்பாக கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பன் விரதம், முருகனுக்கு மாலை அணிவது, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிவது என விரத காலங்கள் அதிகமாக உள்ளது. இதனால் இறைச்சி நுகர்வு குறைந்து மக்கள் காய்கறிகளை அதிகளவில் பயன்படுத்துவார்கள்..
இதனால் இந்த காலங்களில் இறைச்சி விலை வெகுவாக குறையும். அதே நேரத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பதும் வழக்கம் தான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 260 முதல் 250 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் தற்போது 200 ரூபாயாக குறைந்து இருக்கிறது. ஆட்டு இறைச்சி விலை 800 ரூபாயாகவும், மீன்களின் விலை 200 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. அதே நேரத்தில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
ஏற்கனவே வரத்து குறைவு காரணமாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போது வரத்து குறைவோடு. பக்தர்கள் விரதம் கடைபிடிக்கும் காலம் என்பதால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக பீன்ஸ், கத்தரிக்காய், கேரட், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது.

இன்றைய நிலவரப்படி அதிகபட்சமாக காய்கறிகளில் முருங்கைக்காய் கிலோ 280 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரே ஒரு முருங்கைக்காய் மட்டும் 25 ரூபாய் வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் பீன்ஸ் 120 ரூபாய்க்கும், பீட்ரூட் 84 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 90 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கேரட் 95 ரூபாய்க்கும், இஞ்சி 200 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 90 ரூபாய்க்கும், பூண்டு 460 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 76 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிலோ தக்காளி 62 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதே போல ஆப்பிள், நெல்லிக்காய், வாழைப்பழம், திராட்சை, கொய்யா, மாதுளை உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
மேற்கண்ட விலைகள் அனைத்தும் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனை விலை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கிலோ கணக்கில் காய்கறிகளை மொத்த விலையில் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் சில்லறை விற்பனை விலையில் பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை ₹100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.
மேலும் வரும் காலங்களில் கனமழை அதிகரிக்கும் என்பதாலும் விரத காலங்கள் தொடரும் என்பதாலும் காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது. இதனால் காய்கறிக்கு என்று வாங்கும் சம்பளப் பணத்தில் பெரும் தொகையை ஒதுக்க வேண்டி உள்ளதாக புலம்புகின்றனர் இல்லத்தரசிகள்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications