பவாரியா கொள்ளையர்கள் வெறிச்செயல்! அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் நவ.21ல் தீர்ப்பு!
சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் வரும் நவம்பர் 21 ஆம் தேதி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்தவர் கே.சுதர்சனம். அதிமுகவை சேர்ந்த இவர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் சிறிது காலம் இருந்தார்.
சுதர்சனத்தின் வீடு பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் இருந்தது. இங்கு கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி, அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாலை 2.45 மணிக்கு 6 பேர் கொண்ட மர்மகும்பல் புகுந்தனர்.
வீட்டின் கதவை உடைத்து சுதர்சனத்தின் இளைய மகன் சதீஷைத் தாக்கி கட்டி போட்டனர். இந்த சப்தம் கேட்டுவிட்டு, மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சுதர்சனம் கீழே இறங்கி வந்தார். அவர் இந்த கொள்ளையர்களை பார்த்து சப்தம் போட்டார்.
உடனே அந்த மர்மகும்பல் சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து அங்கிருந்து 63 சவரன் நகை, பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதையடுத்து அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அந்த கொள்ளையர்களை உடனடியாக பிடிக்ககாவல் துறைக்கு உத்தரவிட்டார். ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்தத் தனிப்படை மிகத் தீவிரமாக தேடி ஒரு மாதத்திலேயே கொள்ளையர்களை கண்டுபிடித்தது. இதையடுத்து ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதே ஆண்டில் இரு முக்கிய குற்றவாளிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். ராஜஸ்தானில் பவாரியா கொள்ளையர்களை ஜாங்கிட் குழுவினர் பிடித்த சாகசக் கதைதான் "தீரன் அதிகாரம் ஒன்று" என படமாக எடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்ததில் 23 பேர் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், பவாரியா, அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேரை மட்டுமே பிடித்துக் கைது செய்தனர். இருவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதில் ஓம் பிரகாஷ் சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டார். ஜெகதீஷ் 2005 ஆம் ஆண்டு முதல் புழல் சிறையில் இருந்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் ஜெயில்தர் சிங் என்பவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக சென்னை முதன்மை நீதிமன்றத்தில் சுதர்சனம் கொலை வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் வரும் நவம்பர் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications