சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மணி, வர்றீங்களா".. கலைஞர் கூப்பிடுவார்.. அந்த போனுக்கு வாய் இருந்தால் அழுதுடும்.. அன்புமணி உருக்கம்

ஜிகே மணியை புகழ்ந்து பாராட்டி பேசினார் பாமகவின் அன்புமணி ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: ஐநா சபையிலேயே முதல்முறையாக வேட்டியுடன் உட்கார்ந்தவர் நம்ம கட்சி தலைவர் ஜி.கே மணிதான் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் ஜி.கே மணிக்கு வெள்ளி விழா இன்று கொண்டாடப்பட்டது. அதில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ஜிகே மணிக்கு புகழாரம் சூட்டினார்.. அவர் பேசியதாவது: நம் கட்சி தலைவர் ஜிகே மணி என்றால் உழைப்பு தியாகம் என்று அர்த்தம்.

லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயார்..காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட 3 குழுக்கள் அமைத்த சோனியா லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயார்..காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட 3 குழுக்கள் அமைத்த சோனியா

விவசாய குடும்பத்தில் பிறந்து ஆசிரியராக பணியாற்றியவர், பின் பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்களுக்கு சேவையாற்றியவர், அவர் ஆற்றிய சேவையை கண்டு அதிமுகவில் இணைத்துக் கொள்ள எம்ஜிஆர் கூப்பிட்டார்.. ஆனால் அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் ஜிகே மணி.. நம் ராமதாஸ் ஐயாவுடன் இணைந்து மக்களுக்கு தொடர்ந்து பணி செய்து வருகிறார்.

 தேவகவுடா

தேவகவுடா

எவ்வளவோ வெற்றிகள் வந்தபோதும் சரி, ஐயாவுக்கும் நம் கட்சிக்கும் நெருக்கடி சோதனை வந்தபோதெல்லாம் உறுதுணையாக இருந்தவர்.. இது ஒரு பொதுவிழாவாக இருந்திருந்தால், நிச்சயம் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், ஆளுநர் என அனைத்து கட்சி தலைவர்களும் வந்திருப்பார்கள்..தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தேசிய அளவில் தலைவர்களுடன் பழகியவர்.. முன்னாள் பிரதமர்கள், தேவகவுடா, மன்மோகன்சிங் இப்போதுள்ள மோடி வரை நன்கு அறிந்தவர்.

 பெர்ஃபெக்ட்

பெர்ஃபெக்ட்

ஏனெனில் அனைத்து தலைவர்களையும் நன்கு அறிந்தவர். அனைவரிடமும் நன்கு பழகுபவர் கலைஞருக்கு மன உளைச்சல் இருந்தால், போன் போட்டு வாருங்கள் என்று அழைத்து மணிக்கணக்கில் பேசுவார்... பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் எப்போதும் அனைவரும் பர்ஃபெக்ட் ஆக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அப்படிப்பட்ட ராமதாஸுக்கு 25 ஆண்டுகாலம் கட்சி தலைவராக பணியாற்றியது சாதாரண காரியம் கிடையாது.. ஜிகே மணியை தவிர வேறு யாராலும் இதனை செய்திருக்க முடியாது..

 ஜிகே மணி

ஜிகே மணி

பொதுவாழ்க்கையில் நேர்மை, நீதி மிகவும் முக்கியம்.. அந்த வகையில், கட்சி தலைவர் ஜி.கே மணி மிகவும் நேர்மையான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.. இது நமக்கு மிகுந்த பெருமை.. அவரை பற்றி யாராவது ஒரு சின்ன தவறாக பேசிவிட முடியுமா? நிச்சயமாக கிடையாது.. ராத்திரியில் தர்மபுரியில் இருப்பார்.. மறுநாள் பார்த்தால் தஞ்சாவூரில் இருப்பார்.. அடுத்த நாள் சென்னையில் இருப்பார்.. இப்படி ஒரு மனிதரை நான் பார்த்ததே கிடையாது.

 செல்போன்

செல்போன்

உறங்காமல் உழைக்கக் கூடியவர்.. அவரது போனுக்கு மட்டும் வாயிருந்தால் அது அழுதுடும்.. எப்ப பார்த்தாலும் போனில்தான் இருப்பார்.. அந்த போனில் வரும் நூறு போனும், கட்சியை சேர்ந்த போன்தான் வரும்.. பிரச்சனை.. பிரச்சனை என்று போன் வந்து கொண்டே இருக்கும்.. ஆனால், இவருக்கு இன்னொரு முகம் உண்டு.. ஒருசில நபர்கள் மட்டுமே அவர் கோபப்பட்டு பார்த்துள்ளனர்.. அதை நானும் பார்த்துள்ளேன்.. நம் கட்சி பிரச்சனையை விடவில்லை என்றால், விட மாட்டார்.. டிஜிபி என்றாலும் சரி, இறங்கி பேசுவார்.. காவல்துறையை கேள்வி மேல் கேட்பார்.

 நூறாண்டு வாழ வேண்டும்

நூறாண்டு வாழ வேண்டும்

எப்போது வேண்டுமானாலும் தலைவர் ஜிகே மணியை பார்க்கலாம்.. அவரை சந்திக்கலாம்.. எந்த கட்சிக்கும் இப்படி ஒரு தலைவர் கிடையாது.. நம் அய்யா ஒருவருக்கு பாராட்டு விழா நடத்துவது சாதாரண செயல் கிடையாது.. தலைவர் ஜிகே மணி நூறாண்டுகள் வாழ வேண்டும்,.. மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும்.. நம் தலைவர் ஐயாவுக்கு 2 மகன்கள், ஒருவர் ஜிகே மணி.. இன்னொருவர் அன்புமணி.. ஐநா சபையிலேயே முதல் முறையாக வேட்டி கட்டி அமர்ந்தவர் தான் நம் கட்சி தலைவர் ஜி.கே மணி. இவ்வாறு அன்புமணி பேசினார்.

English summary
Very good worker and sincere leader, Anbumani ramadoss praises pmk gk mani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X