கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வசூல்.. வடபழனி இன்ஸ்பெக்டர் வீடியோ வைரல்.. உடனே ஆக்ஷன்
சென்னை: சென்னை வடபழனி இன்ஸ்பெக்டர் கண்ணன், கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வசூலிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை மாநகர தெற்கு மண்டல கூடுதல் கமிஷ்னர் தினகரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மது விற்பனை சென்னையில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெறவில்லை. கடந்த 18ம் தேதி தான் மதுக்கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு மதுவிற்பனை செய்யப்படுகிறது.

கள்ளச்சந்தையில் மது
இந்நிலையில் சென்னையில் கள்ளச்சந்தையில் மது மற்றும் கஞ்சா விற்பனை ஆங்காங்கே நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் போலீசார் அடிக்கடி ரெய்டு நடத்தி அவர்களை கைது செய்து வருகிறார்கள்.

சென்னையில் மது விற்பனை
சென்னை வடபழனி பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து வடபழனி சன்னதி தெருவில் பூட்டப்பட்டிருந்த திருமண மண்டபத்திறகு வடபழனி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கண்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் லஞ்சம்
இந்நிலையில் கள்ளச்சந்தையில் மது மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரிகள் சிலர் இன்ஸ்பெக்டர் கண்ணனை நேரில் சந்தித்து மாமூல் கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்படி லஞ்சம் வாங்கியதாக சொல்லப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காத்திருப்போர் பட்டியல்
அந்த வீடியோவில் கண்ணன் யாரிடமோ பணம் வாங்குவதாக வீடியோ உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் வெளியானதை அடுத்து சென்னை வடபழனி இன்ஸ்பெக்டர் கண்ணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை மாநகர தெற்கு மண்டல கூடுதல் கமிஷ்னர் தினகரன் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications