"இவர்தான் காரைக்குடி த.வெ.க வேட்பாளர்!" விஜய் அறிவிக்கும் முன்பே வெளியான வீடியோ.. குழப்பம்
சென்னை: இன்று தவெக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் எனத் தகவல் வெளியான நிலையில், அதுபோல எந்தவொரு திட்டமும் இல்லை என அக்கட்சித் தலைமை மறுப்பு தெரிவித்திருந்தது. இதற்கிடையே இவர்தான் காரைக்குடி தொகுதியின் த.வெ.க வேட்பாளர் எனச் சொல்லி இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை அனைத்துக் கட்சிகளுமே தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த முறை தேர்தல் களத்தில் புதிதாக இறங்கியுள்ள தவெக, வலிமையான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் தவெகவினர் ஈடுபட்டு வருகிறது.

தவெக
அதேபோல கடந்த சில மாதங்களாகவே தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியவில்லை என்றும் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இன்று சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது..
இன்று திருச்செங்கோட்டில் தவெக நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், அதில் தவெக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனச் சொல்லப்பட்டது. முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்தால் களத்தில் இறங்கி வேலை செய்யச் சரியாக இருக்கும் என்பதால் இன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
மறுப்பு
இருப்பினும், இன்று அதுபோல எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இது தொடர்பாக தவெக ஐடி பக்கத்தில், "வெற்றிவாகை சூடப்போகும் நமது வேட்பாளர்களை, வெற்றித் தலைவர் மட்டுமே அறிவிப்பார். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பரவி வரும் தகவல் உண்மையில்லை. தற்போது நடைபெற்று வருவது தொகுதிவாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே.
வேட்பாளர் அறிமுகம் குறித்த தகவல், முறைப்படி தலைவர் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும். சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களைக் களமிறக்குவார் தலைவர். அதுவரை களத்தைத் தயார்ப்படுத்துவோம். மக்கள் பணியில் கவனம் செலுத்துவோம்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
வீடியோ
அதேபோல புஸ்ஸி ஆனந்தும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு என்பது உண்மையில்லை என மறுத்தார். மேலும், தவெக வேட்பாளரை விஜய் தான் அறிவிப்பார் என்றும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர் விஜய் முகம் தான் என்றும் கூறினார். தவெக தலைமை இதுபோல சொன்னாலும் கூட காரைக்குடியில் தவெக சார்பில் பிரபு என்பவர் போட்டியிடுவதாகச் சொல்லி வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் தவெக வேட்பாளர் பிரபுவுக்காக வாக்கு சேகரிப்பது போல நிர்வாகி ஒருவர் பேசுகிறார்.
தங்க மோதிரம்
அதில் அந்த நிர்வாகி, "நாம் 2026ல் சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கவுள்ளோம். இங்கு (சிவகங்கையில்) டாக்டர் பிரபு தான் வேட்பாளர். அனைவரும் இவருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். கட்சிப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய வேண்டும். அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்" எனக் கூறுகிறார். மேலும், அதில் இன்னொரு வீடியோவில், எந்த பூத்தில் அதிக வாக்கு வாங்குகிறார்களோ.. அந்த பூத் ஏஜெண்டிற்கு இரண்டு கிராம் தங்கக் காசு தருவதாகவும் சொல்கிறார்.
இது தொடர்பாக வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதை விமர்சித்து வருகிறார்கள். வேட்பாளர் பட்டியலை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனச் சொன்ன பிறகும் ஏன் இதுபோல வீடியோக்களை வெளியிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
விஜய் பற்றி.. டெல்லிக்கு பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. ஆட்டத்தை கலைத்து ஆடப்போகும் அமித் ஷா? -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
தவெக பெண் தொண்டர்கள் மீது மதுபாட்டில் வீச்சு.. ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் அதிர்ச்சி! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா?












Click it and Unblock the Notifications