அமைச்சர் உதயநிதியிடம் ஆவேசமாக முறையிட்ட எம்பிபிஎஸ் மாணவன் ஃபயாஸ்தின்.. சரமாரி கேள்வி
சென்னை: நீட்டை எதிர்த்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாதா.. எத்தனை ஜெகதீஸ் மற்றும் அனிதாக்களை நாம் இழக்க போகிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் எம்பிபிஎஸ் மாணவன் ஃபயாஸ்தின் ஆவேசமாக பேசி முற்றுகையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வு மையத்தில் பயின்றுவந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் கடந்த சனிக்கிமை தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்து கொண்டார். இப்படியான சூழலில் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் மறுநாளில் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் தான் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை இறந்து போனதாக குடும்பத்தினர் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறி வருகிறார்கள்.

இது தொடர்பாக ஜெகதீஸ்வரனின் நண்பர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், " நீட் தேர்வில் நான் குறைவான மதிப்பெண் தான் பெற்ற போதும் என் தந்தைக்கு வசதி இருந்ததால் அவர் ரூ.25 லட்சம் பணம் கட்டி என்னை ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்திருக்கிறார். என் நண்பன் ஜெகதீஸ் என்னைவிட நன்றாகப் படிக்கக்கூடியவர். அவனுக்குப் பணமில்லை என்பதால் அவன் மருத்துவராக முடியாமல் போய் உள்ளது. 400 மார்க் எடுத்த என் நண்பனால் மருத்துவராக முடியவில்லை" என்று வேதனை தெரிவித்தார்.
காசு இருப்பவன் தான் டாக்டராக முடியும் என்றால் அவன் டாக்டரானதும் போட்ட காசை எடுக்கப்பார்ப்பானா இல்லை மக்களுக்கு சேவை செய்வானா? எதுக்குத்தான் இந்த நீட் என்று கேள்வி எழுப்பிய அந்த மாணவன், இதை வைத்து இந்த மத்திய அரசு என்னதான் சாதிக்கப்போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
தன்னுடைய நண்பர் மக்கள் பணி செய்யவே நீட் எழுதினான் என்றும் 2 வருடங்கள் எழுதி சீட் கிடைக்கவில்லை என்றும் அந்த மாணவர் ஆதங்கப்பட்டார். 3வது முறை எழுதும்போது அப்பாவுக்காக டாக்டராக வேண்டும் என்று எழுதினார். மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தான்,ஆனால் 400 மார்க் எடுத்தும் மருத்துவர் ஆக முடியவில்லை என்று அந்த மாணவர் வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில் நீட் தேர்வு விவகாரத்தால் மகன் தந்தை அடுத்தடுத்து இறந்த நிலையில், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க விளையாட்டு துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை குரோம்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்றார்.

அங்கு எம்பிபிஎஸ் மாணவர் ஃபயாஸ்தின் ஆவசமாக உதயநிதி ஸ்டாலினிடம் பேசினார். அப்போது கூறுகையில், நீட் தேர்வை எதிர்த்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாதா.. இன்னும் எத்தனை ஜெகதீஸை நாம் இழக்க போகிறோம்..எதாவது பண்ண முடியுமா? அவன் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தான்.
இன்னும் எத்தனை மாணவர்களை, எத்தனை ஜெகதீஸை, எத்தனை அனிதாக்களை நாம் இழக்க வேண்டும்.. ஒருஒரு முறையும் இதே கோரிக்கை தான் சார்.. பிளஸ் 2 முடிச்சிட்டு எதற்கு நீட், ஜேஇஇ என ஒரு ஒரு நுழைவுத் தேர்வாக எழுத வேண்டும் என்றால், எதற்காக 12ம் வகுப்பு படிக்கிறோம் என்றே தெரியவில்லை..
எனக்கு வசதி உள்ளதால் நான் எம்பிபிஎஸ் படிக்க சேர்ந்துள்ளேன்.என் நண்பனுக்கு வசதி இல்லை.. அவனால் எம்பிபிஎஸ் சேர முடியவில்லை.. பணம் தான் நீட்டில் பிரதானமாக உள்ளது. என் தந்தையால் கட்ட முடிந்தது. அவர்களால் முடியவில்லை. இப்போது நம்மிடம் ஜெகதீசும் இல்லை. அவரது தந்தை செல்வமும் இல்லை.. " என்று கூறினார். மாணவர் ஃபயாஸ்தின் பேசும் வரை பொறுமையாக கேட்ட உதயநிதி ஸ்டாலின், அதன்பிறகுஅங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இன்னும் எத்தனை ஜெகதிஸை இழக்க போகிறோம்... அமைச்சர் உதயநிதியிடம் ஆவேசமாக முறையிட்ட MBBS மாணவன் ஃபயாஸ்தின்! #neet #UdhayanidhiStalin pic.twitter.com/bqpuLM5PuR
— velmurugan (@velmurugantheni) August 14, 2023
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் ஃபயாஸ்தின், "இதுக்கு முன்னாடி இருந்த மருத்துவர்கள் எல்லாம் நீட் தேர்வு எழுதாமல்தான் வந்தாங்க.. அப்படினா, அவங்க எல்லாரும் தகுதி இல்லாதவங்கனு சொல்றீங்களா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும் நீட் தான் அவரது இறப்புக்கு காரணமா என்று தெரியவில்லை.. ஆனால் நீட்டும் ஒருகாரணம் என்பதை அடித்து சொல்வோம் என்று கூறினார்.
தற்கொலை தடுப்பு எண் : தற்கொலை எந்தவிஷயத்திற்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு அந்த எண்ணம் வந்தால் உடனே அரசின் 104 என்ற எண்ணை அழைத்து மனநலஆலோசனை பெறுங்கள்.
அரசின் தற்கொலைப்பு எண் 104












Click it and Unblock the Notifications