கவுசல்யா தம்பதிக்கு விருந்து கொடுத்து உபசரித்த வன்னி அரசு
புதுமண தம்பதிகள் கவுசல்யா - சக்திக்கு வன்னி அரசு விருந்து அளித்தார்.
சென்னை: கவுசல்யா - சக்தி புதுமணத் தம்பதிகளுக்கு தனது வீட்டில் விருந்து வைத்து சிறப்பித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு.
உடுமலை சங்கரின் படுகொலைக்கு பின்னர், சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு கவுசல்யா குரல் கொடுத்து வருகிறார்.
இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதோடு மறைந்த சங்கரின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி, அதனை கவனித்தும் வருகிறார்.

மறுமணம்
கடந்த வாரம் கவுசல்யா, நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளரான சக்தி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் நிறுவனர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னி அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைவர்கள் வாழ்த்து
மணமான தம்பதிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், டைரக்டர் ரஞ்சித், நடிகர் சத்யாராஜ் உள்ளிட்ட பல தலைவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள்.

புகைப்படம்
இந்நிலையில் புதுமண தம்பதிக்கு வன்னி அரசு விருந்து கொடுத்துள்ளார். தன் வீட்டிற்கு கவுசல்யா, சக்தியை வரவழைத்த வன்னி அரசு அவர்களை வரவேற்று உபசரித்து விருந்து தந்திருக்கிறார். புது மண தம்பதிகள் தன் வீட்டில் விருந்து சாப்பிடுவதை புகைப்படமாக எடுத்து தனது ஃபேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அற்புதம்மாள்
அதில், "தமிழர் பண்பாடு.. புது மண இணையருக்க விருந்து படைத்து உபசரித்தல் தமிழர் பண்பாடு... கவுசல்யா- சக்தியோடு எங்கள் வீட்டில் விருந்து.... இன்று இரவு" என பதிவிட்டுள்ளார். முன்னதாக, கவுசல்யா, சக்தி தம்பதியை பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் நேரில் வந்து வாழ்த்தினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications