தமிழகத்தில் 24 மாவட்ட அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு பிரிவு ரெய்டு.. ரூ. 44 லட்சம் பறிமுதல்!

நேற்று தமிழகத்தில் தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டப்படாத 44 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகத்தில் பல மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    சென்னை: நேற்று தமிழகத்தில் தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டப்படாத 44 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    நேற்று திடீர் என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இணைந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலங்கங்களை சோதனை செய்தது. மொத்தம் 24 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலங்களில் சோதனை நடந்தது.

    இந்த சோதனை அரசு அதிகாரிங்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தமிழகத்தில் இத்தனை பெரிய ரெய்டு அரசு அலுவலகங்களில் நடப்பது இதுவே முதல்முறை,

    [அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை.. சோதனையின்போதே நெஞ்சுவலியால் இறந்த அதிகாரி]

    எங்கு எல்லாம் நடந்தது

    எங்கு எல்லாம் நடந்தது

    டாஸ்மாக், நகராட்சி, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுபாட்டு வாரியம் வட்டார போக்குவரத்து, மற்றும் ஆவின் அலுவலகம் என வருமானம் ஈட்டும் முக்கியமான அரசு துறைகளில் எல்லாம் சோதனை நடத்தப்பட்டது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    தீபாவளி பண்டிகையின் சமயத்தில் முறைகேடாக பணம் வசூல் செய்யப்படுவதாகவும், இதனால் கணக்கில் வராத பலகோடி பணம் புழங்குவதாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. திடீர் என்று நடந்த இந்த சோதனையில் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 44,30,004 ரூபாய் கைப்பற்றப்பட்டது.

    எவ்வளவு தெரியுமா

    எவ்வளவு தெரியுமா

    மாசுகட்டுபாட்டு வாரியத்தின் சென்னை மாவட்ட பொறியாளர் அலுவலகத்தில் இருந்து ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம். திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம். வேலூர் ஆவின் நிலையத்தில் இருந்து ரூ. 14 லட்சத்து 80 ஆயிரம் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து ரூ. 3 லட்சத்து 90 ஆயிரம்.

    நிறைய ஆவணங்கள்

    நிறைய ஆவணங்கள்

    நாகை மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திலில் இருந்து ரூ. 4 ஆயிரம். நீலகிரி மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து ரூ. 2 லட்சத்து 2 ஆயிரம் என அணைத்ததை பல அலுவகத்தில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டது. அதேபோல் நிறைய ஆவணங்கள் இந்த அலுவலங்களில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+