அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை.. சோதனையின்போதே நெஞ்சுவலியால் இறந்த அதிகாரி

நேற்று தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்திய போது அரசு அதிகாரி ஒருவர் அதிர்ச்சியால் மரணம் அடைந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகத்தில் பல மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    சென்னை: நேற்று தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்திய போது அரசு அதிகாரி ஒருவர் அதிர்ச்சியால் மரணம் அடைந்துள்ளார். கோவையை சேர்ந்த போக்குவரத்து துறை அதிகாரி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

    தீபாவளியை முன்னிட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இணைந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலங்கங்களை நேற்று சோதனை செய்தது. ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டப்படாத 44 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    A transport corporation officer died amidst Vigilance and Anti- Corruption raid in TN

    மொத்தம் 24 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலங்களில் சோதனை நடந்தது. டாஸ்மாக், நகராட்சி, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுபாட்டு வாரியம் வட்டார போக்குவரத்து, மற்றும் ஆவின் அலுவலகம் என வருமானம் ஈட்டும் முக்கியமான அரசு துறைகளில் எல்லாம் சோதனை நடத்தப்பட்டது.

    இதனால் கோவையில் உள்ள மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவிடம் இருந்து கணக்கில் வராத 83 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    [தமிழகத்தில் 24 மாவட்ட அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு பிரிவு ரெய்டு.. ரூ. 44 லட்சம் பறிமுதல்!]

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அங்கிருந்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர் பொய் சொல்வதாக நினைத்துக் கொண்டு அவரை உடனே மருத்துவமனை கொண்டு செல்லாமல் காலம் தாழ்த்தி இருக்கிறார்கள்.

    அதன்பின் அவருக்கு நெஞ்சுவலி அதிகமாகவே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். தற்போது இவர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அதிகாரிகளின் இந்த சோதனையும் அதை தொடர்ந்த மரணமும் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+