ED அதிகாரி அங்கித் திவாரி பற்றி பரபரப்பு தகவல்.. மணல் குவாரி அதிபர்களிடமும் பணம் கேட்டு மிரட்டினாரா?
சென்னை: லஞ்சம் வாங்கி பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பற்றி, லஞ்ச ஒழிப்புத்துறையின் எஃப்.ஐ.ஆரில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத்துறை அவர் மீது 2018 இல் வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், டாக்டர் சுரேஷ் பாபுவிடம் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதற்கு ரூ.3 கோடி லஞ்சம் தருமாறு மதுரை அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி பேரம் பேசியுள்ளார்.

திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி அங்கித் திவாரி 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். இது குறித்து மருத்துவர் ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் தகவலறிந்து அங்கு வந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தலைமையிலான காவல் துறையினர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காரிலிருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் கைப்பற்றி, அவரையும் கைது செய்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிடிபட்டதை அடுத்து, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் தகவல் அறிக்கை: இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தியவர் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் அங்கித் திவாரி பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர், திண்டுக்கல் டாக்டர் சுரேஷ் பாபுவை மிரட்டியது தொடர்பாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது சேவையை களங்கப்படுத்திவிடுவதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார். லஞ்சம் தராவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அரசு மருத்துவரை மிரட்டியுள்ளார். உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சப் பணத்தில் பங்கு தர வேண்டும் எனக் கூறி மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டியுள்ளார் அங்கித் திவாரி.
மேலும், திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தியவர். திண்டுக்கல் அரசு மருத்துவர் லஞ்சப் பணத்தை தயார் செய்துவிட்டு தொடர்பு கொண்டபோது மணல் குவாரியில் இருப்பதாக அங்கித் திவாரி கூறியுள்ளார்.
மணல் குவாரி அதிபர்களிடம் பேரம்?: ஏற்கனவே பல பேரை மிரட்டி பணம் பறித்துள்ளதால், மணல் குவாரி அதிபர்களிடமும் அவர் லஞ்ச பேரம் பேசினாரா என விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை ரெய்டில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் பகுதி தொழிலதிபர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, அங்கித் திவாரி, மணல் குவாரி அதிபர்களிடமும் லஞ்சம் கேட்டு மிரட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், லஞ்ச பணத்தை ஹவாலா பணப்பரிமாற்றம் செய்பவர்கள் மூலம் கொடுத்தனுப்ப முடியுமா என திண்டுக்கல் மருத்துவரிடம் அங்கித் திவாரி கேட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையின் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications