"நாம ஆட்சிக்கு வந்தா.. அதென்ன வந்தா.. நிச்சயம் வருவோம்” விஜய் பேச்சால் உற்சாக ஆரவாரம்!
சென்னை: "நாம ஆட்சிக்கு வந்தா.. அதென்ன வந்தா.. வருவோம்.. மக்கள் கண்டிப்பா நம்மை ஆட்சிக்கு வர வைப்பார்கள். மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி வர வைக்கத்தானே செய்வாங்க.. " எனப் பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய். விஜய் பேச்சால் தவெகவினர் உற்சாக ஆரவாரம் செய்தனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பரப்புரையின்போது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் கட்சியின் பிரச்சாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்து வந்த விஜய், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், மீண்டும் மக்களைச் சந்தித்து வருகிறார் விஜய்.
இன்று காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியில் தவெக தலைவர் விஜய் மக்களை சந்தித்து வருகிறார். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2,000 தவெக தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், "மிகப்பெரிய மனவேதனைக்குப் பின்னர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. தனிப்பட்ட முறையில் தி.மு.க மீது எந்த வன்மமும் இல்லை. மக்களை பொய் சொல்ல ஏமாற்றி ஆட்சி வந்த தி.மு.க.வை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?
மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை மறந்தது யார்? த.வெ.க.விற்கு கொள்கையில்லை என பேசுகிறார் தமிழக முதலமைச்சர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள த.வெ.க.விற்கு கொள்கை இல்லையா? கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என கூறிய த.வெ.க.விற்கு கொள்கை இல்லையா?" எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய விஜய், "நாம ஆட்சிக்கு வந்தா.. அதென்ன வந்தா.. வருவோம்.. மக்கள் கண்டிப்பா நம்மை ஆட்சிக்கு வர வைப்பார்கள். மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி வர வைக்கத்தானே செய்வாங்க.. மக்களுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற விளக்கத்தை தேர்தல் அறிக்கையில் கொடுப்போம்" எனப் பேசினார். விஜய் பேச்சால் தவெகவினர் உற்சாக ஆரவாரம் செய்தனர்.
-
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
முடிவை மாற்றிய ராகவா லாரன்ஸ்.. விஜய்யா? அண்ணாமலையா? யாருடன் கைகோர்க்கிறார்? நாளை மறுநாள் அறிவிப்பு -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
மின் தடை பரிதாபங்கள்.. சென்னைல மட்டும் தங்கத்தில் பியூஸ் கேரியர் இருக்குமோ.. தெறிக்கும் மீம்ஸ்!











Click it and Unblock the Notifications