வார் ரூமுக்கு வந்த விஜய்.. தவெக சீனியர்களுடன் முக்கிய ஆலோசனை! வெளியே வந்ததும் செம உற்சாகம்!
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தவெக வார் ரூமில் தவெக தலைவர் விஜய், மூத்த நிர்வாகிகளுடன் இன்று திடீர் ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் இருந்து வந்த கையோடு விஜய் அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் இன்று அறிவித்தார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி என்று தேர்தல் நடைபெறும் என்றும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நேற்று (மார்ச் 15) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், டெல்லியில் சிபிஐ மூன்றாம் கட்ட விசாரணையை மேற்கொண்டது. நேற்று காலை சிபிஐ விசாரணைக்காக ஆஜரான விஜய்யிடம், கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து நேற்று இரவே சென்னை திரும்பினார் விஜய்.
சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்று திரும்பிய கையோடு மூத்த நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் திடீர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்ட தவெகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி உள்ளார்.
வேட்பாளர் அறிவிப்பு, சுற்றுப்பயணம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்டவை குறித்து விஜய் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தவெகவை என்டிஏ கூட்டணிக்கு இழுக்க முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், விஜய் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 7 மணி வரை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தவெக வார் ரூமில் ஆலோசனை நடத்தி உள்ளார் விஜய். வேட்பாளர் பட்டியலை தயார் செய்வது, தேர்தல் வியூகங்களை வகுப்பது தொடர்பாகவும் இன்று விஜய் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் முதலில் இன்று பட்டினம்பாக்கத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அங்கிருந்து தேனாம்பேட்டை வந்து ப்ரெஸ்டிஜ் பாலிகனில் உள்ள வார் ரூமில் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து சிரித்த முகத்துடன் வெளியே வந்த விஜய், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தம்ப்ஸ் அப் காட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications