விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக!
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மணிப்பூர் ஆளுநருக்கு சிடிஆர் நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஓய்வு பெற்றது கூட தெரியாமல் தவெக கடிதம் எழுதி இருப்பது சாமானிய மக்களிடையே கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதற்காக மார்ச் 30ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த விஜய், உடனடியாக பிரச்சாரத்தை தொடங்கினார். பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனால் அதிகளவில் கூட்டம் கூடியது. ஒரு கட்டத்தில் விஜய்யின் வாகனம் நகர கூட முடியாத நிலையில் சிக்கியது. இதனால் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவாக நடக்கவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இதன்பின் கடந்த 2 நாட்களாக விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் இருக்கிறார்.
அதேபோல் விஜய்க்கு போதிய பாதுகாப்பை காவல்துறை வழங்கவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு கடிதம் அனுப்பினார். அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறைபாடு இருப்பதாக மத்திய உள்துறை செயலாளருக்கு தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கடிதம் எழுதி இருக்கிறார்.
ஆனால் அந்த கடிதத்தின் இடம்பெற்றுள்ள பெயர் தான் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. தவெக தரப்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மத்திய உள்துறை செயலாளராக அஜய் பல்லா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அஜய் பல்லா 2024லேயே ஓய்வு பெற்றுவிட்டார். இதன்பின் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அஜய் பல்லா மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
தற்போது மத்திய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் செயல்பட்டு வருகிறார். இதனால் தவெக சார்பாக மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஓய்வு பெற்ற அதிகாரியை கூட தெரியாமல் தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் கடிதம் எழுதி இருப்பது பல்வேறு கட்சியினரால் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடிதம் திரும்பி வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
-
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்!












Click it and Unblock the Notifications