விஜய் வாழ்க்கையில் சில சனியன், சகடைகள்.. ஆணவ போதையில் இருக்கார்.. எக்ஸ் மேனேஜர் பிடி செல்வக்குமார்!
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் வாழ்க்கையில் சில சனியன் சகடைகள் இணைந்த பின், மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவரின் முன்னாள் மேனேஜர் பிடி செல்வக்குமார் தெரிவித்துள்ளார். விஜய் ஆணவ போதையில் இருப்பதாக கூறிய பிடி செல்வக்குமார், எஸ்ஏ சந்திரசேகர் - ஷோபா ஆகியோரின் 60வது கல்யாணத்தில் கூட விஜய் பங்கேற்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் நடிகையுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக கூறி அவரின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளார். 2021ஆம் ஆண்டிலேயே விஜய் மற்றும் நடிகைக்கு இடையிலான கள்ளத்தொடர்பை அறிந்துவிட்டதாக கூறியுள்ள சங்கீதா, அப்போதும் கூட இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விஜய்யின் முன்னாள் மேனேஜரும், திமுக நிர்வாகியுமான பிடி செல்வக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சங்கீதா வெளிநாட்டில் இருந்து வந்த பெண்.. தொடக்கத்தில் பயந்த சுபாவம் கொண்டவர் தான்.. என்னை அண்ணா என்றே சங்கீதா அழைப்பார்.
இருவருக்கும் இடையில் நன்றாக உறவு சென்று கொண்டிருந்தது. இடையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.. குறிப்பிட்ட சனியன் சகடைகள் இணைந்த பிறகு விஜய் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பங்கள், மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதே தெரியவில்லை.. எஸ்ஏ சந்திரசேகர் - ஷோபா இடையில் 60வது திருமண நாள் நடைபெற்றது.
அதில் கூட விஜய் பங்கேற்கவில்லை. விஜய் அவரது ரசிகர்களுக்கும் உண்மையாக இல்லை.. கரூர் சம்பவத்திற்கு பின் அங்கிருந்து ஓடிவிட்டார். தாய், தந்தை, தயாரிப்பாளர்கள், மேலாளர்கள், மக்கள் என்று யாருக்கும் விஜய் உண்மையாக இல்லை.. விஜய்யுடன் தொடக்க காலத்தில் இருந்து நின்றவர்கள் யாருக்கும் உண்மையாக இல்லை.. விஜய்க்கு ஆணவ போதை.. காலம் பார்த்து கொண்டிருக்கிறது.
கர்மா சரியாக கொடுக்கும்.. எந்த உச்சத்திற்கு சென்றாலும், கீழ் வந்துதான் ஆக வேண்டும்.. சங்கீதா வெளியில் வந்து பேசுவதே பெரிய விஷயம்.. அவர் தனது மனக்குமுறலை கொட்டியுள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்.. வாழ்க்கையில் மனைவிக்கு மரியாதையாக இருக்க வேண்டும்.. ஒரு நடிகரை நம்பி உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications